உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iii

இந்தப் ‘பரிசு’ நூலை என் அன்புக்கும் மதிப்புக்கும் மரியாதைக்குமுரியவரும் மனிதாபிமானமும் தெளிந்த சிந்தனையும் அளவு கடந்த நிதானமும் வழிகாட்டும் தன்மையும் படைத்தவரும் கோவை இந்திய சோவியத் நட்புறவுக் கழகத் (இஸ்கஸ்) தலைவருமான கலைமணி நிறுவனங்களின் தலைவர் திரு எஸ்.மணி அவர்கள் அச்சிட்டுள்ளார்கள். இது கலைமணி கல்வி அறக்கட்டளை கவிஞருக்குக் கொடுக்கும் பரிசு. இதன் மூலம் கலைமணி கல்வி அறக்கட்டளை, நூற்ருண்டுக் கவிஞன் பாரதியை உண்மையாகவே கெளரவிக்கிறது - ஒரு நல்ல கவிஞரை இனம் புரிந்து பாராட்டுவதன் மூலம். வாழ்க! கவிஞர் வெல்க கலைமணி கல்வி அறக்கட்டளை!

வ. உ. சி தென்வடல் மெயின் ரோடு

தில்லைநகர் - கோயமுத்துார்-26.

(ஒ-ம்) சக்திக்கனல் 18- 5 - 1982