பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

59

சாற்றிக்கொள் வதனைச் சாற்றிச்
சரிவரச் சாமான் வாங்கிப்
போற்றிக்கொள் வதற்குப் போகும்
பொழுதுச்சிப் பொழுதா கப்போய் ,—
காற்றுக்கொள் கின்ற போது
களந்தனில் கண்ணய்க் காத்துத்
துற்றிக் கொள் வதுபோல் ,––நாளும்
தொழில்படும் கடையிஃ தொன்றே !

வேலையில் விருப்பம் வைத்து
வெளியேறி விடவே பாட்டி ,
காலையில் நிகழ்ந்த காட்சி
கருதியாங் கிருக்க வேநான்
சோலையில் மயில்போல் வந்தே
சுந்தரி குந்தி னள்,கை
நூலையு மேந்தி, நோக்கும்
நோக்கொன்ற நுணுகி நோக்கி !

காவியங் கண்ம லர்ந்து
கடைக்கணித் தருளிக் காயாக்
கோவையங் கனியில் கூர்த்த
குறுநகை மதுவுட் கொண்டே,
“தேவியின் காட்சி யாலித்
தேகத்தி லிருந்து தீர்ந்த
ஆவியும் மலரும், மீண்டங்
ககலின்மற் றுலரு” மென்றேன்.

“கட்டினை யறுத்துக் கொண்டு
கண்மூடிக் கடுகிக் கைக்கங்
கெட்டின முருங்கை யின்மேல்
ஏறிற்றம் வெறிவே தாளம் !
‘மட்டெ’னும் தமிழ்சொல் லொன்று;
மது, மிதம் பொருளி ரண்டு !
பட்டெனப் பதியப் பாடம்
பயிற்றுக !” என்றள், பாவை .