பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

60

“பட்டன்ன பைம்பொன் மேனி ,
பவளவாய் , பங்க யத்தின்
மொட்டென்ன முகிழ்த்த கொங்கை !
முழுமதி முகத்தில் பூத்து
விட்டன்ன குவளை யுண்கண் ;
வில்லெனும் புருவச் செல்வீ !
தொட்டுன்னைப் பார்க்க என்கை
துருதுருக் கின்ற” தென்றேன்.

“துதிசெய்யும் தோத னைத்தும்
தூரமா யொதுக்கித் துாய
கதிசெய்யும் கலையைக் கண்முன்
கவினகச் சுட்டிக் காட்டிப்
பதிசெய்யும் பாங்க னைத்தும்
பதனமாய்ப் பதியச் செய்தால்,
சதிசெய்வ தனைத்தை யும்நான்
சரிசெய்யத் தவிர்க்கே” னென்றள்.

“தோதென திதயத் தோரெட்
டுனையேனும் துளிர்க்கா தல்லீ !
‘தீதெ’னத் தெளிந்த வொன்றித்
தேசத்தி திர்க்கத் தேர்ந்து
நூதன மான நூல் ,—நான்
நுணுகியாய்ந் தெழுதுங் கால்,நீ
சோதனை யாய்வந் தென்னைச்
சொக்கிடச் செய்து வைத்தாய் !

பழகினு மென்னம் ; பார்த்துப்
பழகாம லிருந்து மென்னம்!
மெழுகினிற் செய்த பொம்மை
மேதகு வண்ணப் பூச்சுற்
‘றழகெ’னி னென்னம் ! வெய்யோன்
அனல்கதிர்க் குருக லொத்துன்
ஒழுகலின் வெயிலென் னுள்ளத்
துறுதியை யுருக்கிற்” றென்றேன்.