உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

61


“‘அருமையா யறிவ தாய்ந்தும்,
அகத்தினில் புறத்தைக் கண்டும்
இருமையின் வகைகள் தேர்ந்தே
இலக்கெனக் கொண்டி யங்கி,
உரிமையா யொழுக்க முண்மை
உயிரென வோம்பு வோர்தம்
பெருமையே பிறங்கிற்’ றென்று
பேசினேர் மாசில் லாதார் !

பொன்னையும், புவியை யும், பூப்
போலவே கமழப் பூத்த
கன்னியர் தமையுங் கண்டு
கருத்தழி யாது காத்துத்
தன்னைத்தா னடக்கி யாளும்
தகவில ராயின் நீரும்,
என்னையும் நானே யேசி
யிதயம்நொந் திறப்பே” னென்றள்.