பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 r பரிபாடல் மூலமும் உரையும் மார்பும் அல்குலும் மனத்தொடு பரியை ; கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியை ; 55 வேள்வியும் மறனும் விருப்பொடு வெய்யை ; முடிந்ததும், முடியப்போவதும், தோன்றப் போவதுமாகிய காலங்கள் மூன்றும் கடந்தவையான உயிரினமனைத்தும் கழல் பொருந்திய நின் திருவடி நீழலின்கண் உள்ளவையே ஆகும். நின்னைப்போற்றும் உயிர்கட்கு இருமைவினையின் பற்றுதலும் இல்லை. அனைத்தையும் காத்தலாகிய ஒரு செயலையே பொருந்தும் உள்ளத்தினை உடையாய்! இலைகளுக்கு மேலாக உயர்ந்து மலர்ந்த, வளவிய இதழ் களைக் கொண்ட் செந்தாமரை மலரைப் போன்றவை நின் திருவடிகளும், கைத்தலங்களும், கண்களும், வாயும் ஆகும். கைவளையும், உந்தித்தடமும், தோளணியாகிய வலயமும், தாளும், தோளும், கழுத்தும் பெரியவாகப் பெற்றவனே! மார்பும், அல்குலும், மனமும் பரந்தவாகப் பெற்றேர்னே கேள்வியும், அறிவும், அறப்பண்பும் நுண்மையாகக் கொண்டிருப்போனே! வேள்விக்கண் விருப்பமும், போர்மறத்தின்கண் வெம்மையும் கொண்டு விளங்குவோனே! - - சொற்பொருள் : காலத்தைக் கடந்து நிற்கும் ஜீவன் முக்தர்கள் அவன் நிழலில் இருப்பவர். எனவே, அவன் காலங்களையும் கடந்து நிற்கும் முதல்வன் என்றனர். இருமை வினை - நவ்வினை, தீவினை. ஒருமைவினை - காத்தல். அடை - இலை. வள்ளிதழ் - வளமான இதழ். தோளணி வலயம் - தோள் வலயம் என்னும் அணி, எருத்து கழுத்து. அல்குல் - உந்திக்குக் கீழும் முழங்காலிற்கு மேலுமாக உடுக்கைபோல் விளங்கும் உடற்பகுதி. கேள்வி - நூற்கேள்வி, பிறரறிவின் பயனைக் கேட்டறியும் அறிவு இது அறிவு-இயல்பாக அமைந்த பகுத்தறிவு. அறம் அறிவொடு பட்ட சீரிய ஒழுக்கம். வெய்யை - வெம்மை 2D 6ð)L–lLÍ. - எம் ஆசை! அறாஅ மைந்தின் செறாஅச் செங்கண் செருமிகு திகிரிச் செல்வ! வெல்போர்! எரிநகை இடையிடுபு இழைத்த நறுந்தார்ப் புரிமலர்த் துழாஅய் மேவல் மார்பினோய்! - 60 அன்னையென நினைஇ நின்னடி தொழுதனெம்; பன்மாண் அடுக்க இறைஞ்சினெம்; வாழ்த்தினெம் முன்னும் முன்னும்யாம் செய்தவப் பயத்தால், இன்னும் இன்னுமெம் காமம் இதுவே.