பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 _udun-so spogpin e-sonuità அவ்வாறே யாமும் எம் சுற்றத்தோடும் கூடியவராக நின் திரு வடிகளைப் பிரியாதிருக்கின்ற அந்தப் பேற்றினைப் பெறுமாறு, எமக்கும் இப்போதே அருளிச் செய்வாயாக, பெருமானே! சொற்பொருள் : புரி - முறுக்கு. இயல் - பாட்டு. சுருதி - வேதகோஷம். சுடர் - விளக்குச் சுடர், கருப்பூரச் சுடர் போன்றன. அடியுறை - அடியவர். விளக்கம் : 'பெருமானே! நின்னைச் சேர்ந்திருக்கும் மலையும், மலையிடத்து மரமும், செடியும், சுனையும் அழகு பெற்று விளங்கக் காண்கின்றேம். நின்னை அடைந்த யாமும் அவ்வாறே இன்புற்றுப் பொலிவு பெறவும், நின்னடி நீழலைப் பிரியாதிருக்கவும் அருள்வாயாக’ என்று வேண்டுகின்றனர். பத்தொன்பதாம் பாடல் செவ்வேள் (9) பாடியவர் : நப்பண்ணனார்; பண் வகுத்தவர் : மருத்துவன் நல்லச்சுதனார்; பண் : காந்தாரம். மயிற்கொடி வதுவை நிலவரை அழுவத்தான் வானுறை புகல்தந்து புலவரை அறியாத புகழ்பூத்த கடம்பமர்ந்து அருமுனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சிமன் இருநிலத் தோரும் இயைகென ஈத்தநின் . தண்பரங் குன்றத்து இயலணி நின்மருங்கு 5 சாறுகொள் துறக்கத் தவளொடு மாறுகொள் வதுபோலும் மயிற்கொடி வதுவை; பெருமானே! கடல்கள் எல்லையாகச் சூழ்ந்திருக்க விளங்குவது இந் நிலவுலகம். வானகத்தே உறைபவனான நீதான், இவ்வுலகிற்குப் புகலிடமாக நின்னைத் தந்தருளினாய். அறிவின் எல்லையாலும் அளந்தறிய வியலாத பெரும் புகழினோடு விளங்கும் கடப்பமரத்தின் கண்ணும் வீற்றிருக்கலானாய். அரிய முனிவர்கள் எனப்படுகின்ற ஏழு பெருமுனிவர்களின் மரபிலே வருபவர்களான சான்றோர்கள் நின்னைப் போற்றி இன்புற்றனர். 'அந்த இன்பத்தின் அநுபவப்பயனை இப் பெரிய நிலவுலகத்தி லுள்ள மக்களும் அடைவாராக’ என்னும் கருணையினாலே தான், நீ நின் தோற்றத்தை இவ்வுலகிற்கும் அளித்தனை. அவ்வாறு அளித்த இடங்களுள் சிறந்ததாகிய நின் திருப்பரங் குன்றத்தில், நீ மணக்கோலத்தோடும் அமர்ந்திருப்பவனும் ஆயினை. நின் ஒரு பக்கத்தே உறைபவளான தேவயானைப் பிராட்டியோடும் நீதான். வீற்றிருந்தனை. மணவிழாக் கொண்டு முறையாகப் பெற்ற