பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்_செவ்வேள் (18) - 173 அப்பிராட்டியோடுங்கூட, மயிலின் சாயலையும் பூங்கொடியின் மென்மையினையுங் கொண்ட வள்ளிநாயகியையும் நீ மணந்து கொண்டது, அத்திருமணத்திற்கு மாறுபட்ட களவுமணத்தையும் ஏற்றுக்கொள்வதற்காகவே ப்ோலும்! - சொற்பொருள் : வரை - எல்லை. அழுவம் - கடல் புகல் புகலிடம்; விருப்பம் புலம் - அறிவு. அருமுனி - சப்த இருடிகள். மரபின் மரபிலே, ஆன்றவர் - சான்றோர். நுகர்ச்சி அநுபவம். இயல் அணி - இயலும் அணியும்; இயற்கையழகும் அணியழகும் கொண்ட நிலை சாறு - விழா, மணவிழா. மாறு - மாறுபாடு. விளக்கம் : "வேதவிதிப்படி செய்து கொள்ளும் மணமே முறையானது' என்பதற்கு மாறாகக், காதல் மணத்தையும் . உலகினர் ஏற்குமாறு செய்யும் பொருட்டாகவே, பெருமான் வள்ளிநாயகியைக் களவுமுறைப்படி காதலித்து மணந்து கொண் டனன் என்பதாம். - யாத்திரை செல் யாறு புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடல் கலப்போடு இயைந்த இரவுத்தீர் எல்லை அறம்பெரி தாற்றி அதன்பயன் கொண்மார், 10 சிறந்தோர் உலகம் படருநர் போல, - உரிமாண் புனைகலம் ஒண்துகில் தாங்கிப் புரிமாண் புரவியர் போக்கமை தேரர் தெரிமலர்த் தாரர் தெருவிருள் சீப்ப, நின் குன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு 15 நேர்பு நிறைபெய்து இருநிலம் பூட்டிய தார்போலும் மாலைத் தலைநிறையால் - தண்மணல் ஆர்வேலை யாத்திரைசெல்யாறு; - அறிவாற்றலாற் செய்யப்படும் சொற்போர்களினும், உடலாற்றலாற் செய்யப்படும் மறப் போர்களினும் தோல்வியே அறியாதவர் கூடல்நகரத்தினர். இவையன்றியும், கலவிப்போ ரொடும் பொருந்தியவராக, இரவுப் பொழுது தீர்கின்ற எல்லைப் பொழுதுதான புலர் காலைப் பொழுதினும், வெற்றியே பெறு பவர் அவர்கள். மேலும், இல்லறவாழ்விலே அறச் செயல்களைப் பெரிதும் முறையாகச் செய்து, அதன் பயனாகிய நற்பேற்றையும் பெறுபவர் அவர்கள். அதனாற் சிறந்தோர் உலகமெனப்படும் துறக்கவுலகையும் அவர்கள் முடிவிற் சென்று சேர்வார்கள். அவர்களைப் போல, - சிறந்த முறையிற் செய்யப்பெற்ற அணிதற்குரியவான அணிகலன்களையும், ஒள்ளிய துகிலையும் தாங்கியவராக, ஆடவரும் பெண்டிரும் பரங்குன்றத்தை நோக்கிச் செல்வார்கள்.