பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் செவ்வேள் (19) - 177 கூர நாண்குரல் கொம்மென ஒலிப்ப - - ஊழுற முரசின் ஒலிசெய்வோரும் 45 பரங்குன்றனைப் பராவச் செல்வாருள் சிலர், அக் குன்றத் திடத்தே மற்றும் பலவான இனிய செயல்களினும் ஈடுபட்டுத் திளைப்பார்கள். அங்குள்ள குரங்குகள் அருந்துமாறு பாலகாரங் களைக் கொடுப்பார்கள் சிலர். கருமையான முகத்தைக் கொண்ட முசுக்கணம் என்னும் குரங்குகளுக்குக் கரும்புத் துண்டுகளைச் சிலர் தருவார்கள். தெய்வத்தன்மை வாய்ந்த தென்னும் பிரமவீணையை மீட்டி இசைப்பார்கள் சிலர். துளைகளிலே கைவிரல்களை வைத்து ஒலிஎழுப்பும் குழற்கருவிகளை இசைத்து இன்பங் காண்பார்கள் சிலர். யாழின் இளி, குரல், சமம் என்னும் பேதங்களை அறிந்து, அதனை மீட்டி இசையின்பங் கொள்வார் கள் சிலர். பெருமானைக் குறித்துச் சேய்யப்படும் வேள்விகளின் அழகினையும், சிறப்புக்களையும் வாய்குளிரச் சொல்லிக் கொண்டிருப்பார்கள் சிலர். யாழ் நரம்பு களின்றும் எழுகின்ற குரலானது கொம்மென்று ஒலிசெய்ய, அதன் இசைமுறைக்குப் பொருத்தமுற முரசினை அடித்து ஒலி எழுப்புவார்கள். சிலர். சொற்பொருள் : பண்ணியம் - பலகாரம் கருமுகக்கணம் - முசுக்கணம். பிரமம் - பிரமiணை.இமிர்பு - ஒலிக்கும். இளி, குரல், சமம் என்பன இசைக் கூறுபாடுகள். அழகு இயல் அழகும் சிறப்பும். கூரம் யாழ். ஊழுற முறைக்குப் பொருந்தி அமைய. - சித்திரச் செல்வம்! - என்றுழ் உறவரும் இருண்டர் நேமி ஒன்றிய சுடர்நிலை யுள்புடு வோரும் இரதி காமன் இவளிவன் எனாஅ விரகியர் வினவ வினாவிறுப் போரும் இந்திரன் பூசை இவளக லிகையிவன் - 50 சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு ஒன்றிய படியிதென்று உரைசெய்வோரும் இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டறி வுறுத்தவும் நேர்வரை விரியது துணிபரங் குன்றத்து 55 மாஅல் மருகன் மாட மருங்கு; கோடைக்காலம் உண்டாகுமாறு வரும் இருசுடர்களும் வானவட்டத்தே பொருந்தியுள்ள சுடர்நிலைகளை ஆராய்ந்து, அவற்றின் நுட்பங்களைச் சிலர் ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். இரதி இவள் காமன் இவ்ன் என்று, திருக்கோயிற் சிற்பங்களுள் இரண்டைக் காட்டிக், காமங் கொண்டோர் அருகிருந்தாரைக் கேட்ப, அவர்கட்கு விடையளித்தபடி யிருந்தனர் சிலர். “இவன்