பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 - பரிபாடல் மூலமும் உரையும் - இந்திரனாகிய பூனை ; இவள் அகலிகை இவன் புலர்காலைப் போதிலே நீராடச் சென்றவனாகிய க்வுதமன், இவன் சினங் கொண்டு சபிக்க, அகலிகை பெற்ற கல்லுருவம் இது இவை நேர்ந்த கதை இவ்வாறு" என்று, சொல்லியபடி இருந்தனர் சிலர். இத்தகைய பலவான ஒவியங்களைக்கொண்டு விளங்குவது. எழுத்துநிலை மண்டபம் என்னும் திருக்கோயிற் பகுதியாகும். அதனைச் சார்ந்தவர், ஒவ்வொன்றையும் சுட்டிக் காட்டுவோ ராகவும், சுட்டப்பட்டவற்றிற்கு விளக்கம் கூறுவோராகவும் விளங்கினர். - * - உயரமான மூங்கில்கள் பரந்து நிழல்செய்தபடி விளங்கும், அகன்ற பாறைப்பகுதியாகிய பரந்த இடத்திலேஅமைந்திருந்த மண்டபம் எழுத்து நிலை மண்டபம் ஆகும். அது, இத்தகைய மங்கல நிலையோடு, பரங்குன்றத்தே விளங்கும் திருமால் மருகனின் திருக்கோயிலின் ஒருபக்கத்தே, மிகத் தெளிவான அமைப்புக்களோடும் காணப்படும். . - சொற்பொருள் : என்றுழ் கோடை விரகியர் - மோகங் கொண்டோர். பூசை - பூனை. துன்னுநர் அடைந்தோர். நேர்வரை - நேராக உயர்ந்து வளர்ந்த மூங்கில்கள். சோபன நிலை - மங்கல நிலை; சோபன நிலைதுணி பரங்குன்றம்’ எனவும் கொள்க; என்றும் மங்கல நிலையினையே கொள்ளச் செய்யும் பரங்குன்றம் என்று, அதன் சிறப்புக் கூறப்பட்டது. உவப்பவன்! பிறந்த தமரின் பெயர்ந்தொரு பேதை பிறங்கல் இடையிடைப் புக்குப் பிறழ்ந்தியான் . - வந்த நெறியும் மறந்தேன் சிறந்தவர் 60 ஏஎ ஓஒ எனவிளி ஏற்பிக்க . . . . ஏஎ ஒஓவென்றேலா அவ்விளி . . . . அவ்விசை முழையேற் றழைப்ப அழைத்துழிச் செல்குவ ளாங்குத் தமர்க்கா னாமை - மீட்சியும் கூஉக்கூஉ மேவும் மடமைத்தே 65 வாழ்த்துவப்பான் குன்றின் வகை; தன்னைப் பெற்றோரைவிட்டுப்பிரிந்தாளான ஒரு பேதைப் பெண், பாரைக்கற்களுக்கு இடையிடையே புகுந்து, வழிதவறிய வளாக, 'யான் வந்த வழியினையும் மறந்தேன்’ என்று மனமயங்கி வாட்டமடைந்தாள். அவ்வேளையில், அவளைக் காணாராகிய அவளைப் பெற்றோர், 'ஏஎ; ஒஒ’ என அவளை அழைத்துக் கூவினர். 'ஏன், ஒஒ' என்னும் அந்த அழைப்பொலி வந்த இடத்தை அவள் உணரவில்லை. ஆனால், அவ்விளி யொலியினை மலைக் குகைகள் ஏற்று, எதிரொலிகளைச் செய்தன. அப் பேதைப்பெண்