பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 . . . . பரிபாடல் மூலமும் உரையும் எட்டாம் பாடல் - தண்தமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்

  • நின்று நிலைஇப் புகழ்பூத்தல் அல்லது

குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான் குன்றமுண்டாகும் அளவு. - தண்மையான தமிழையே காக்கும் வேலியாகக் கொண்ட தமிழ்நாட்டின் இடமெல்லாம், தன் புகழ் நிலைபெறுமாறு நிலைத்து, அப் புகழால் பொலிவுபெற்று விளங்குவதும் அலலாமற் கொடிவிளங்கும் தேரோனாகிய பாண்டியனுக்குரிய திருப்பரங்குன்றம் உள்ள காலத்தளவும், மதுரையின் புகழானது என்றும் குறைப்படுதல் என்பதும் உளதாகுமோ? ஆகாது. சொற்பொருள் : வேலி - காவல். நாட்டகம் - நாட்டிலுள்ள இடங்கள். நிலை இ - நிலைத்து. புகழ் பூத்தல் - புகழாற் பொலிவு பெறுதல். g . - குறிப்பு : இது புறத்திரட்டிற் கண்டது. ஒன்பதாம் பாடல் செய்யாட்கு இழைத்த திலகம்போல் சீர்க்கொப்ப வையம் விளங்கிப் புகழ்பூத்தல் அல்லது பொய்யாதல் உண்டோ மதுரை புனைதேரான் வையை உண்டாகும் அளவு. . புனைதலைக் கொண்ட தேரினை உடையவன் பாண்டியன். அவனுக்கு உரியது வையையாறு. அஃது இருக்கும் வரையில், திருமகட்கிட்ட திலகத்தைப்ப்ோலத் தன் சிறப்புக்கு ஏற்றபடியாக உலகத்தில் விளங்கிய புகழோடு பொலிவுறுதல் அல்லாமல், மதுரைநகரமானது, தன் பெருமைகெட்டு அழிதல் என்பதும் உளதாகுமோ? ஆகாது காண். - - சொற்ப்ொருள் : செய்யாள் - திருமகள். திலகம் - பொட்டு; திருமகளின் நெற்றித் திலகம். தமிழகத்தைத் திருமகளாகவும், மதுரையை அதன் நெற்றிப்பொட்டாகவும் கூறினர். குறிப்பு: இதுபுறத்திரட்டிற் கண்டது. பத்தாம் பாடல் கார்த்திகை காதிற் கனமகர குண்டலம்போல் சீர்த்து விளங்கித் திருப்பூத்தல் அல்லது . கோத்தையுண் டாமோ மதுரை கொடித்தேரான் வார்த்தையுண்டாகும் அளவு.