பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் பாடிய சான்றோர்கள் - 247 இவைபோன்ற மிக்க செறிவான கருத்துக்களை நயமாகச் சொல்லி, நமக்கும், நம் தமிழ்க்கும் வ்ாழ்வளித்த சான்றோர் இந் நல்லந்துவனார்.ஆவர். வையைப் புனல் பரந்து பெருகிப் பயன் விளைவிக்கும் சிறப்பைக் கூறும் இவர், . - * . 'மாசில் பனுவற் புலவர் புகழ் புல நாவிற் புனைந்த நன்கவிதை மாறாமை மேவிப் பரந்து விரைந்து வினைநந்தத் - தாயிற்றே தண்ணம் புனல் (பரி. 6) என்று கூறுகின்றார். இவ்வுவமை இவரது செய்யுட்களுக்கும் மிகமிகப் பொருந்தும் எனலாம். - - - பரங்குன்றை இமயக்குன்றோடு ஒப்பிட்டுப் போற்றும் செவ்வியைப் பரிபாடல் 8ஆம் பாடலுட் காணலாம். முருகன டியவரின் பக்திச்செறிவையும்.அவர்க்கு வாழ்வளிக்கும் முருகனின் அருட்கணிவையும், தமிழ்நலங் கனியும் இவரது இப் பாடல் தெளிவாகக் காட்டுகின்றது. - . தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார் - - இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்’ (பரி 20) எனக் கற்பறநெறி நிற்கும் நங்கையரின் செவ்வியைக் காட்டுவார் இவர். - இவ்வாறாகநயமும் செறிவும், எழிலும் நுட்பமும் ஏற்றமும் பண்பும், சொல்லுக்குச் சொல், தொடருக்குத் தொடர் அமைந்திலங்கத் தமிழமுதை வழங்கிய வள்ளல் பெருமான் இவராவர். இதனாலேயே மருதனிள நாகனார் அந்துவன் பாடிய' என்றனர் எனலாம். - . மையோடக் கோவனார் - 7 - இப்பரிபாடலுள் வையைக்குரியதான ஏழாவது பாடலைப் பாடியவர் இவர். இவர் பெயரைக் குறித்துச் சிந்திக்கும்போது, வையைக்கண் ஒடஞ்செலுத்தும் தொழிலினர் எனவும், அதனைச் சிறப்புறப் பலரையும் ஏவல்கொண்டு நிகழ்த்தியமையின் 'ஒடக்கோவனார்’ எனப்பட்டனர் எனவும் தெரிகின்றது. மை என்பது இவாக வண்ணத்தையோ, இவர் செலுத்திய ஒடத்தின் வண்ணத்தையோ குறித்தாகலாம். . . . . பழங்காலத்தே வெள்ளப்பெருக்கினை ஒடங்களிற் கடந்து செல்லலும், புதுநீர்ப் பெருக்கில் அழகமைந்த ஒடங்களைச் செலுத்திக் களித்து விளையாட்டயர்தலும் வழக்கமாயிருந்தன. இதனால், அத் தொழிற்கண் ஈடுபட்டு மக்கட்கு உதவித் தாமும் அதனால் வாழ்வு நடாத்தியவர் இவரெனலாம். -