பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரங்கூன் வருகை

29

"இரண்டாயிரம் பேர் இருக்கலாம். அதற்கு மேலும் இருக்கலாம்"

"அவ்வளவு கூட்டமா?"

வியப்புடன் கேட்டேன். சட்டென்று எழுந்தேன்.

ஒலிபெருக்கியை நோக்கி ஓடினேன். தலைமை உரையாற்றிக் கொண்டிருந்த தோழரைக் கையைப் பிடித்து இழுத்தேன்.

ஒலிபெருக்கியைப் பிடித்துக் கொண்டேன்.

"தமிழ்ப் பெருமக்களே! மண்டப வாயிலில் கூடியிருக்கும் அன்பர்களே! உங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள்.

நம் தலைவர் தந்தை பெரியார் அவர்களை நீங்களெல்லாம் காணவும், அவர் பேச்சைக் கேட்கவும் ஆசைப்படுகிறீர்கள் புரிகிறது. இந்த மண்டபத்தில் கூட்டம் நிறைந்து விட்டது. வெளியில் உள்ள நீங்கள் உள்ளே வந்து நிற்கக் கூட இடமில்லை. இந்நிலையில் உங்களையெல்லாம் நான் வேண்டிக் கொள்கிறேன். வீதிப் பிளாட்பாரத்தில் அப்படியே உட்கார்ந்து விடுங்கள் பெரியார் பேச்சை அமைதியாகக் கேளுங்கள். பெரியார் பேசி முடிந்தவுடன் மண்டபத்திற்கு வெளியே உங்கள் மத்தியிலே பெரியார் அவர்கள் பதினைந்து நிமிடம் வந்து நின்று காட்சி தருவார் ஆசை தீரப் பார்க்கலாம் அன்போடு பார்க்கலாம், யார் வேண்டுமானாலும் நெருங்கிப் பேசலாம்.

ஆகவே பெருமக்களே! பெருமக்களே! அமைதியாக உட்காருங்கள் மண்டபத்திற்குள் வெளிக்காற்று வர வேண்டும். ஆகவே வாயிலை அடைத்துக் கொண்டு நிற்காமல் வழிவிட்டு ஒதுங்கி உட்காருங்கள். அன்போடு பணிவோடு உங்கள் அனைவரையும் வணங்கிக் கேட்டுக்