பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரங்கூன் வருகை

31

பர்மா வாழ் தமிழ் மக்கள் கட்டுப்பாடாகவும், ஒற்றுமையாகவும் தோழமை உணர்வோடும் வாழ வேண்டும். பர்மிய மக்களோடு சரிநிகர் சமானமாகப் பழக வேண்டும. பர்மிய நாட்டின் நலத்திற்கு ஊறு தராத வகையில் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் பதினைந்து நொடிகள் பேசி அத்தனை பேரும் பெரியார் வாழ்க! என்று முழங்கி வாழ்த்த அங்கிருந்து புறப்பட்டார்.

பெரியாரை மவுந்தாலே வீதியில் கொண்டு போய்ச் சேர்த்த பின் சிறிது நேரத்தில் நான் வீட்டுக்குப் புறப்பட்டேன்.

யாழ்ப்பாணத் தமிழரான துரைப்பிள்ளை என்ற பெரியவரிடம் நான் வேலை பார்த்தேன். கப்பல்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் நிறுவனம் நடத்தி வந்தார் அவர். நான் அங்கு கணக்கர் வேலை பார்த்தேன்.

கணக்கர் என்றால் மேசையில் உட்கார்ந்து கணக்கெழுதுவது அல்ல என் வேலை முழு நேர உழைப்பு. காலை 6 மணிக்கு மார்க்கெட்டுக்குச் செல்ல வேண்டும். கப்பலுக்கு வேண்டிய காய்கறிகள், மீன், இறைச்சி வகைகள், போன்றவற்றை 7 மணிக்குள் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். சில நாட்களில் ஒரு கப்பலில் மட்டுமே வேலையிருக்கும், சில நாட்களில் 5 அல்லது ஆறு கப்பல்களுக்குச் செல்ல வேண்டும். சில கப்பல்கள் துறைமுகத்தில் நிற்கும். சில கப்பல்கள் துறைமுகத்தில் இடம் கேட்டுக் காத்துக் கொண்டு ஆற்றின் நடுவில் நிற்கும், சில சமயம் ஆற்றில் நிற்க இடம் கிடைக்காமல் கடல் நுழைவாயிலிலேயே நிற்பதும் உண்டு. எங்கு கப்பல்