பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

பர்மாவில் பெரியார்

"பெரியாரிடமே கேட்கலாமே!?" என்றேன்.

"கேட்டு விட்டோம். உங்கள் ஒப்புதல் வேண்டும் என்கிறார் பெரியார். அதற்காகத்தான் மூன்று மணியிலிருந்து காத்திருக்கிறோம்."

"நான் நேராகப் பெரியாரிடம் சென்றேன். அய்யா நீங்கள் நபிகள் நாயக விழாவில் எத்தனையோ முறை கலந்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது மறுப்பதற்குக் காரணம் என்ன?" என்றேன்.

"மறுக்கவில்லை. இரங்கூனில் இருக்கும் வரை. எந்த நிகழ்ச்சிக்கும் உன்னுடைய ஒப்புதல் இல்லாமல் நான் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. இங்குள்ளவர்கள் எனக்குப் புதியவர்கள். உனக்கு அவர்களைப் பற்றித் தெரிந்திருக்கும். ஆகவே, எதையும் உன் மூலமாகவே செய்வது பாதுகாப்பாய் இருக்கும் அல்லவா?" என்றார் பெரியார்.

"எனக்கும் அவர்கள் தெரிந்தவர்கள் இல்லையே!" என்றேன் நான்.

"நீ சொன்னால் நான் அவர்களுக்கு ஒப்புதல் கொடுப்பேன், வேண்டாம் என்றால் விட்டுவிடுவோம்" என்றார் பெரியார்.

"பெரிய மனிதர்கள் வந்திருக்கிறார்கள், நமக்கு ஒருநாள் கூட்டச்செலவு மிச்சம். நபிகள் விழாவிலும் பெரியார் தன்மானக் கருத்துக்களைத் தான் பேசப் போகிறார்" என்று முடிவெடுத்து, "ஐயா ஒப்புக் கொள்ளுங்கள்" என்றேன்.

முஸ்லிம் பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பினார்கள். மறுநாள், மிகப் பெரிய கூட்டம் ஒன்று நடந்தது. பெரியார் வழக்கம்போல் நபிகள் நாயகத்தின் புதிய