பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மோல்மேன் பயணம்

45

நிலைமையைப் பார்த்த பெரியார், உடனே அந்த விமானத்திலேயே இரங்கூன் திரும்பிவிட முடிவு செய்தார்.

விமானத்தில் இடம் இல்லை என்று தெரிவித்து விட்டார்கள்.

பத்தாவது நிமிடம் அங்கு ஏறிய பயணிகளுடன் விமானம் புறப்பட்டு விட்டது.

இறங்கிய பயணிகளும், வரவேற்க வந்த உறவினர்களுடன் கார்களில் புறப்பட்டுச் சென்று விட்டார்கள்.

ஒரே ஒரு வாடகை ஜீப் மட்டும் நின்றது. அதன் ஒட்டுநர் பர்மியர்.

அவரே வலிய வந்து "வருகிறீர்களா!" என்று பர்மிய மொழியில் கேட்டார்.

ஆங்கிலம் தெரியாத அவரிடம் இராசாராம் ஏதோ கேட்க அவர் மொழி புரியாமல் தவிக்க, ஒரு குழப்பமா சூழ்நிலை நிலவியது.

அந்த நேரத்தில் மூன்றுபேர் அரக்கப் பரக்க விமானத் திடலை நோக்கி வந்தார்கள்.

"ஐயா வணக்கம்" என்று கை கூப்பிப் பெரியாரை வணங்கினார்கள்.

அவர்கள் கையில் ஒரு துண்டறிக்கை!

அதை இராசாராம் வாங்கிப் படித்தார்.

மோல்மேன் நகர இந்திய மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பெரியாருக்கு பிரம்மாண்ட வரவேற்புக் கொடுப்பதாகவும், சாதிமத வேற்றுமை மனசாட்டாமல் இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்