பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மோல்மேன் பயணம்

49

பெரியார் வந்தபொழுது, மோல்மேனில் கூட்டம் ஒன்று நடத்தமுடியாமல் போய்விட்டது. அந்தக்குறையை இன்று தீர்த்துவிட்டோம் என்று அந்த மூன்று தோழர்களும் என்னிடம் உணர்ச்சியுடன் கூறினார்கள்.

அன்று பெரியார் அவர்கள் குடிசைப் பகுதியில் சொற்பொழிவாற்றி முடித்த பின் அந்தத்தோழர்கள். அவரை இரங்கூனுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

"அய்யா, நாளை மறுநாள் மாலைபோகும் விமானத்தில் ஒரே ஒரு இடம் இருக்கிறது. அதன் பிறகு பதினைந்து நாட்களுக்கு எந்த விமானத்திலும் இடம் இல்லை" என்று அந்தத்தோழர்கள் சொன்னபோது பெரியார் திகைத்துப் போனார்.

"வேறு வழியில்லையா?"

"அய்யா, இரயிலில் போகலாம், ஆனால் போய்ச்சேர மூன்றுநாள் ஆகும்".

" அவ்வளவு தொலைவா? பிளேனில் நாற்பது நிமிடத்தில் வந்துவிட்டோமே?"

" தொலைவு இல்லை அய்யா. அது மிகக் கடுமையான பயணம் உங்களுக்கு மிகத் தொல்லையாய் இருக்கும்."

"இரயிலுக்கு என்ன கட்டணம்?"

" பதினைந்து ரூபாய்."

" பிளேனுக்கு?"

"நாற்பது ரூபாய்".

"ஒரு சீட்டுக்கு இருபத்தைந்து ரூபாய் மிச்சம் இருக்கிறது. பதினைந்து நாட்கள் இங்கே வெட்டியாய் இருப்பதை விட இரயிலில் உட்கார்ந்துகொண்டு போகலாம்."