பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மோல்மேன் பயணம்

55


இவ்வளவு எளிதான இரயில் பயணம், பர்மா விடுதலையடைந்த பிறகு பெருந்துன்பப் பயணமாக மாறிவிட்டது. மூன்றுநாள் பயணம் ஆகிவிட்டது. சூழ்நிலை இந்தக் கொடுமையை உருவாக்கி விட்டது.

பர்மா விடுதலை அடைந்தவுடன், எந்தெந்த ஊரில் இராணுவ முகாம்கள் இருந்தனவோ அந்த நகரங்கள் மட்டுமே பர்மிய அரசாங்கத்தின் கையில் இருந்தன. நாட்டின் பெரும்பகுதி கலகக்காரர்கள் (INSURGENTS) வசமாகிவிட்டது.

பர்மா விடுதலை அடைந்த உடன் பெரும்பாலான பகுதிகளைக் கலகக்காரர்கள் வசப்படுத்திக் கொண்டார்கள்.

இரண்டாவது உலகப்போரின் போது சப்பானியப் படைகளும்,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசீய ராணுவமும் மலேயாவை வசப்படுத்தி பர்மா வழியாக இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்தார்கள். இந்திய தேசிய ராணுவமும் சப்பானியப் படைகளும் ஒவ்வொரு ஊராகப் பிடித்துக்கொண்டு வந்தபோது பிரிட்டிஷாரின் இந்தியப் படை பின்வாங்கிக் கொண்டு வந்தது. பின்வாங்கி ஓடும் படையினர் ஆங்காங்கே இராணுவ முகாம்களில் விட்டு விட்டு வந்த ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும், கம்யூனிஸ்டுகள், கரீன்கள் போன்ற எதிர்க் கட்சிக்காரர்கள் எடுத்துப் பதுக்கி வைத்துக் கொண்டார்கள்.

கடுமையும் கொடுமையும் மிகுந்த சப்பானிய ஆட்சியில் அவர்கள் பதுங்கிப் பதுங்கி வாழ்ந்ததால், இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தமுடியவில்லை. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டிஷ் ராணுவம் திருப்பித்