பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மோல்மேன் பயணம்

57

கொண்டார்கள், இவர்கள் அன்னியில், ஏகப்பட்ட கொரில்லாக் குழுக்கள், எந்த வித இலட்சியமுற்ற குழுக்கள், தத்தம் அதிகாரத்தில் சில பல ஊர்களை வைத்துக்கொண்டன.

நாடு முழுவதும் தனித்தனி ஆட்சிகள் அமைந்து ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குப் போய் வர முடியாமல் இருந்தது.

நாட்டு விடுதலைக்காகப் போராடி, முதல் அரசு அமைத்த தளபதி அவுங்சான், ஒருநாள் அமைச்சரவையைக் கூட்டியிருந்தபோது, தீவிர கம்யூனிஸ்டுகளால் அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

அந்தக் கூட்டத்திற்குத் தாமதமாக வந்த ஊநூ தப்பிப்பிழைத்தார். ஊநூ தலைமையில் புதிய அமைச்சரவை ஏற்பட்டு, தளபதி அவுங்சானின் இலட்சிய வழியில் நாடு நடைபோட்டது.

ஊநூவின் பெரு முயற்சியால், நாட்டின் பல பகுதிகள் கலகக் குழுவினரிடமிருந்து மீட்கப்பட்டு, போக்குவரத்துத் தொடங்கப்பட்டது.

ஆற்றுப் பாதையில் கப்பல்கள் (Motor Launches) போய் வரத் தொடங்கின, சாலைப் போக்குவரத்துகளும் நடக்கலாயின. ஆனால், பயணங்கள் எல்லாம் பாதுகாப்பற்றவையாகவே இருந்தன.

மார்ட்டபான் நகரில் புறப்படும் இரயில் இரங்கூன் வந்து சேர மூன்று நாள் ஆகியது. ரயில் பயணம் நடைபெற்றவிதம் இதுதான்.