பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

மக்கள் மூடத் தனங்களிலிருந்து விடுதலை பெறுவது மிகமிகத் தேவையானது என்ற கொள்கை-சுயமரியாதைக் கொள்கை அன்று என் உள்ளத்திலே வேர் கொண்டது.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1954-ல் பெரியாரை வரவேற்று பத்துநாட்கள் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குத் தானாக ஏற்பட்டது.

அரசியல் தலைவர்களுடன் நெருங்கிப் பழகும்போது, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையால், அவர்களுடைய தனிப்பட்ட குணக்கேடுகளால், அவர்களுடைய தனிப்பட்ட ஆசா பாசங்களால் அவர்களுடைய தனிப்பட்ட பழக்க வழக்கங்களால் தொண்டர்கள் கசந்துபோன அனுபவங்கள் பல,

ஆனால் இந்தத் தலைவர் - என் அன்புத் தலைவர் - பெரியார் - இவர் ஒர் அரசியல் தலைவராக இல்லாத காரணத்தாலோ என்னவோ - ஒரு சமுதாயத் தலைவராக இருப்பதால் தானோ - தம் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாக ஆக்கிக் கொண்டிருந்தார்.

ஒளிவு மறைவு இல்லாமல் மக்களிடையிலே மிக எளிமையாக - யாரும் நெருங்கத் தக்க சூழ்நிலையிலே - என்றென்றும் மக்கள் தலைவராக - மக்கள் நலம் பற்றியே சிந்திப்பவராக - மக்களுக்காகவே தன் வாழ்வு என்ற இலட்சியம் கொண்டவராக வாழ்ந்தார் பெரியார்.

பர்மாவில் நான் இருந்தபோது பத்து நாட்கள் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 5 மணி நேரம் - மட்டுமே அவருடன் நான் இருந்தேன். அந்தப் பத்து நாட்களின் வரலாற்றுக் குறிப்புதான் இது.