பக்கம்:பர்மா ரமணி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துப்பறியும் சிங்கம் ! 97 அடேயப்பா ! இவர் பெரிய துப்பறியும் சிங்கம்...! படிப்பைத் தவிர வேறு எது சொன்னுலும், தயார் ! இப்படிப்பட்ட பிள்ளையாண்டன் இருக்கும்போது நமக்கு என்ன கவலை!' என்று கேலியாகக் கூறினர் வேதநாயகம், ஆனந்தன், அவனுடைய அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை. ஆகையால், அவனை எப்படியாவது நன்ருகப் படிக்கவைத்து ஒரு டாக்டராக்கி விடவேண்டும் என்று அவன் அப்பா ஆசைப்பட்டார். ஆனால், ஆனந்தனுக்கு அந்த ஆசையெல்லாம் இல்லை. வேளா வேளைக்கு வீட்டிலே சாப்பிடவேண்டியது ; ஒரு சினிமா தவருமல் பார்க்கவேண்டியது; கண்பர்களுடன் ஊர் சுற்ற வேண்டியது; ஓய்ந்த நேரத்தில் பள்ளிக்கூடத்துக்கும் போய்வர வேண்டியது! இப்படிப்பட்ட அழகான பிள்ளைக்கு எப்படிப் படிப்பு வரும் ? ஆனந்தனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்ட வுடனே அவனுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக்கொடுக்க ஒரு வாத்தியாரை அவன் அப்பா ஏற்பாடு செய்து விட்டார் ஆனால், அந்த வாத்தியார் எப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவன் மூளையில் ஏறுவதே இல்லை! அவனுக்குப் படிப்பில் கவனம் இருந்தால்தானே! அலமாரியில் இருக்கும் பட்சணத்தையும் பழத்தையும் கினைத்துக்கொண்டே யிருப்பான். சிறு பையனுக இருந்தபோது அவன் பாடம் படித்த அழகே ஒரு தனி அழகுதான். 'ஆனந்தா, கிழமைகள் எத்தனே ? வரிசையாகச் சொல்!” என்பார் வீட்டு வாத்தியார். ஆனந்தன் வாயைத் திறக்கமாட்டான். ஆளுல், கண்களை மட்டும் அகலத் திறந்து விழித்துப் பார்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/100&oldid=807826" இலிருந்து மீள்விக்கப்பட்டது