பக்கம்:பர்மா ரமணி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பர்மா ரமணி பான் என்ன ஆனந்தா, இது தெரியாதா! ஞாயிறு, திங்கள்...” என்று அடி எடுத்துக் கொடுப்பார் வாத்தி யார். அப்போதுதான் ஆனந்தனுக்குக் கிழமைகள் என்ருல் என்ன என்பது புரியும். உடனே, "ஐ அதுவா சார். இதோ சொல்லுகிறேன்” என்று கூறிவிட்டு, எஞாயிறு, திங்கள், செவ்வாய்” என்பான். உடனே செவ்வாயிலிருந்து ஒரே தாவாக வெள்ளிக்குத் தாவி விடுவான்! :வெள்ளி, சனி' என்று கூறி அத்து ன கிறுத்தமாட்டான். ஆக ஒரு வாரத்துக்குக் கிழமைகள் ஏழு என்று அழுத்தந் திருத்தமாகக் கூறியே முடிப் பான், அவன் சொன்ன கிழமைகளோ ஐந்துதான்! ஆனந்தன் இரண்டாவது வகுப்பில் படிக்கும் போது, எட்டும் நான்கும் எத்தனை?” என்று கேட் டால், ஒன்பது, பத்து-” என்று ஆரம்பித்து இருபது வரை கூடப் போய்விடுவான். சில சமயம் முப்பதையும் தாண்டி விடுவான். வீட்டு வாத்தியார் எப்படி எப்படி யெல்லாமோ கூட்டல் கணக்கைச் சொல்லிக்கொடுத்துப் பார்த்தார். ஆனந்தன் மூளையில் ஏறில்ைதானே! ஆலுைம் பையன் மண்டு என்பதை அவன் அப்பா ஒப்புக்கொள் வாரா? வாத்தியாருக்குச் சொல்லிக்கொடுக்கத் தெரிய வில்லை என்றுதானே சொல்லுவார்? ஆகையால், அந்த வாத்தியார் ஒரு தந்திரம் செய்தார். ஆனந்தனுடைய அப்பா அல்லது அம்மா.அருகிலே இருக்கும்போது, ஆனந்தா, எட்டும். நான்கும் எத் தனே?” என்று உரத்த குரலில் கேட்பார் வாத்தியார். உடனே ஆனந்தன், எட்டுக்கு அப்புறம்... ஒன் பது...' என்று இழுப்பான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/101&oldid=807827" இலிருந்து மீள்விக்கப்பட்டது