பக்கம்:பர்மா ரமணி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துப்பறியும் சிங்கம்! 99

ம்...' என்பார் வாத்தியார்.
  • 35 'பத்து..

6:ம்.'

பதினென்று...'

கம்...”

பன்னிரண்டு...'

ம், ம், ம் சேர்ந்தாற்போல் வாத்தியார் மூன்று தடவை ம்’ போட்டதும், ஆனந்தன் கிறுத்திவிடுவான் ! மேலே போகமாட்டான். உடனே, அடடே, நம் பிள்ளை சரியாகச் சொல்லுகிருனே !’ என்று கினைத்து, அவன் அப்பா அம்மா ஆனந்தப் படுவார்கள். ஆல்ை, வாத்தியார் பன்னிரண்டு என்றதும், ம், ம், ம் என்று சொல்லாமல், ம் என்று ஒரு தடவை மட்டும் சொல்லி யிருந்தால் ஆபத்துத்தான்! அவன் கிறுத்தியிருக்கவே மாட்டான். 13, 14, 15 என்று சொல்லிக் கொண்டே போயிருப்பான். எங்கு போய் கிறுத் துவானே தெரியாது! - இவ்வாறு மண்டுவாக இருந்தும், அவன் ஐந்து வகுப்புவரை ஒரு வகுப்பில் கூடத் தோல்வியடைந்த தில்லை. இதற்குக் காரணம் வேருென்றுமில்லை. அவன் படித்துவந்த ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியரே அவனுக்கு ஐந்து வருஷமும் வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார். அப்படியிருக்கும்போது, பையன் தோல்வி அடையலாமா? தோல்வியடைந்தால் தலைமை ஆசிரியருக்கு அல்லவா கேவலம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/102&oldid=807828" இலிருந்து மீள்விக்கப்பட்டது