பக்கம்:பர்மா ரமணி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{}{} பர்மா ரமணி ஆல்ை, ஆருவதுக்குச் சென்றதும், ஆனந்தனின் சாயம் வெளுத்துவிட்டது! அஸ்திவாரம் பலமில்லாத போனுல் கட்டடம் கிலத்து கிற்குமா ? வகுப்பிலே கடைசி அவன்தான் ! ஆருவதில் இரண்டு வருஷங்கள் இருந்தான். அதற்கு மேலும் பல வருஷங்கள் அவன் அதே வகுப்பில் இருந்திருப்பான். ஆலுைம், அந்தப் பள்ளியிலே ஒரு வழக்கம் உண்டு. இரண்டு வருஷங் களுக்கு மேல் ஒரு பையனை ஒரு வகுப்பில் நிறுத்துவ தில்லை என்பதுதான் அந்த வழக்கம். அதனுல்தான், மூன்ருவது வருஷமும் ஆனந்தன் அதே வகுப்பில் இருக்கவில்லை. ஏழாவதுக்குத் துாக்கிப் போடப்பட் -ான். ஏழாவதில் ஆண்டுப் பரீட்சை நடந்தது. முடிவு வெளிவந்தது. ஆருவதிலிருந்து ஏழாவதுக்குப் புதிதாக வருகிறவர்களை வரவேற்க வேண்டுமே, அதற்காக ஆனந்தனை ஏழாவது வகுப்பிலேயே கிறுத்தி வைத்து விட்டார், அந்த உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரி யர் ஆலுைம், தான் தேறிவிட்டதாகப் பொய் சொல்லி, அப்பாவிடம் கடிகாரப் பரிசு வாங்கிவிட்டான் ஆனக் தன். அன்று விருந்துக்கு அப்பா ஏற்பாடு செய்வ தாகக் கூறியதைக் கேட்டதும், பயந்து சென்னைக்கு ரயிலேறிவிட்டான். சென்னையில் பேணுவை விற்கப் போய், போலீஸில் அகப்பட்டுக் கொண்டதும், மாமா மதுரகாயகம் அவனே விடு வித்த து ம் தெரிந்த கதை மதுரகாயகத்தின் கடிதத்தைப் பார்த்ததிலிருந்து, ரமணியை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று ஆனந்தன் ஆசைப்பட்டான். அன்றே மதுரகாயகத்துக்குப் பதில் கடிதமும் எழுதி விட்டான். நீங்கள் கொஞ்சங்கூடக் கவலைப்பட வேண்டாம். எனக்குப் பள்ளிக்கூடம் திறக்க இன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/103&oldid=807829" இலிருந்து மீள்விக்கப்பட்டது