பக்கம்:பர்மா ரமணி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துப்பறியும் சிங்கம் ! 101 சரியாக ஒரு வாரம் இருக்கிறது. அதற்குள் ரமணி எங் கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து அவனை உங்களிடம் அனுப்பிவைப்பேன்" என்று உறுதியாக எழுதினன் அந்தக் கடிதத்தை உடனேயே தபால் பெட்டியில் சேர்த்துவிட்டு வீட்டுக்கு வந்தான். கையிலே ஓர் அரிவாளே எடுத்துக் கொண்டான். நேராகத் தோட்டத் திலுள்ள வேப்ப மரத்தின் அருகே சென்ருன் விறு விறு' என்று அதன் மேல் ஏறினன். வளையாமல் இருந்த ஒரு நீண்ட கிளேயை அரிவாளால் வெட்டிச் சாய்த்தான். பிறகு, கீழே இறங்கிவந்து அதை எடுத்து கன்ருகச் செதுக்கினன். அது ஒரு தடி போல் ஆகிவிட்டது. உடனே, அவன் தன் அறைக்குள்ளே சென்ருன். அங்கே இருந்த அரை அடி ஸ்கேல்’ ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தான். ஸ்கேலால் ஒன்பது தடவை அளந்தான். 9x =4; அடி ஆகி விட்டதல்லவா? நாலரை அடியோடு அந்தத் தடியை வெட்டினுன் வெட்டி முடியும் சமயம் அவன் அம்மா அங்கே வந்து சேர்ந்தாள்.

என்னடா செய்கிருய், ஆனந்தா ?” என்று கேட்டாள்.

'அளவுகோல் செய்கிறேன் அம்மா. அந்த ரமணி காலரை அடி உயரம் இருப்பதாக மாமா எழுதியிருக்கி ருரே, ஞாபகம் இல்லையா ? அவனைத் தேடிக் கண்டு பிடிக்க அளவுகோல் வேண்டாமா ?’ என்று கேட்டான் ஆனந்தன். அம்மாவுக்கு இதைக் கேட்டதும் சிரிப்புத்தான் வந்தது. ஆலுைம், அவள் சிரிக்கவில்லை. மாமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/104&oldid=807830" இலிருந்து மீள்விக்கப்பட்டது