பக்கம்:பர்மா ரமணி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* {}2 பர்மா ரமணி எழுதியது உண்மைதான். ஆலுைம், கமது ஆனக் தனும், ரமணியும் ஒரே உயரம்தான் இருப்பார்கள் என்றுகூட அந்தக் கடிதத்தில் இருந்ததே, அதை நீ படிக்கவில்லையா ? அவன் உன் உயரம்தான் இருப் பான் என்ருல். இந்த அளவு கோலெல்லாம் எதற்கு!” என்று கேட்டாள் அம்மா. 'அடடே, ஆமாம், அம்மா! அவனுடைய உயரம், கிறம், வயது எல்லாமே என்னைப் போலத்தானும் ! அதனுலேதான் பட்டனத்துப் போலீஸ்காரர்கள் அவ னுக்குப் பதிலாக என்னைப் பிடித்து ஜெயிலுக்குள்ளே தள்ளிவிட்டார்கள்! சரி, அப்படியானுல், இந்த அளவு: கோல் வேண்டாம். எவன் மேலேயாவது சந்தேகம் வந்தால், உடனே நான் என்ன தெரியுமா செய்வேன்? அவன் பக்கத்திலே போய் கின்று பார்ப்டேன். என் உயரமும், அவன் உயரமும் சரியாக இருந்தால், அவன் ரமணிதானு என்று விசாரிப்பேன். ரமணியாகவே இருந்தால் உடனேயே மாமாவுக்குத் தந்தி அடித்து விடமாட்டேன!” என்று குது.ாகலமாகக் கூறினுன் ஆனந்தன். - என்னவோ நாம் கண்டுபிடித்தால் நமக்கும் நல்லது, மாமாவுக்கும் நல்லது' என்ருள் அம்மா. கண்டுபிடிக்காமல் விடுவேன?’ என்று விருப்புப் பேசின்ை ஆனந்தன். w சினிமாவில் துப்பறியும் சிங்கங்களையும், புலி: களையும் பார்த்துப் பார்த்து ஆனந்தனுக்கும், அவர் களைப்போல் துப்பறியும் ஒரு சிங்கமாகவோ அல்லது புலியாகவோ மாறவேண்டும் என்ற ஆசை வெகு காட் களாகவே உண்டு. அதற்கு இப்போது ஒரு சக்தர்ப் பம் கிடைத்திருக்கிறதே, அவன் விடுவான ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/105&oldid=807831" இலிருந்து மீள்விக்கப்பட்டது