பக்கம்:பர்மா ரமணி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. குண்டுமணி. அன்று சாயங்காலமே ஆனந்தன் ஒரு பைஞ. குலர் வாங்கிவிட்டான். வெகு துரத்தில் ரமணி. போனல் கண்டுபிடிக்க வேண்டாமா ? அதற்குத்தான் அந்த பைனுகுலர்! மறுநாள் காலையில் பலகாரம் சாப் பிட்டதும், புஷ்கோட், முழுக்கால் சட்டை, பூட்ஸ், தலையில் மடக்குத் தொப்பி முதலியவற்றை அணிந்து கொண்டான். கழுத்திலே பைணுகுலரைத் தொங்க விட்டுக் கொண்டான். சட்டைப் பையில் ரமணியின் அடையாளங்கள் அடங்கிய சிறிய கோட்டுப் புத்த கத்தை வைத்துக்கொண்டான். உடனே வீட்டை விட்டுக் கிளம்பி கேராக அவனுடைய அருமை கண் பன் குண்டுமணி வீட்டுக்குச் சென்ருன். குண்டு+மணி இரண்டும் சேர்ந்துதான் குண்டு மணியாகிவிட்டது. ஆமாம் மணி என்பது அவ. னுடைய இயற் பெயர். அதாவது, அப்பா, அம்மா வைத்த பெயர். குண்டு என்பது பள்ளிக்கூடப் பிள்ளைகள் அன்போடு கொடுத்த காரணப் பெயர்: காலேந்து வருடிைங்களுக்கு முன்பு புடலங்காய் போல் இருந்த மணிதான், இப்போது பறங்கிக்காய் போலப். பருத்து விட்டான். இன்னும் பருத்துக் கொண்டே யிருக்கிருன். ஒவ்வொரு வாரமும் அவனுடைய சுற். றளவு அதிகமாகிக் கொண்டே யிருக்கிறது. • ‘. . . விளையாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, சித்திரப் போட்டி-இப்படிப் பள்ளிக்கூடங்களில் என்ன என் னவோ போட்டிகள் வைக்கிருர்களே, சாப்பாட்டுப் போட்டி என்று ஒரு போட்டி வைக்கக் கூடாதோ ? அப்படி ஒரு போட்டி வைப்பதா யிருந்தால், அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/106&oldid=807832" இலிருந்து மீள்விக்கப்பட்டது