பக்கம்:பர்மா ரமணி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பர்மா ரமணி முதல் பரிசு யாருக்குத் தெரியுமா கிடைக்கும் குண்டு மணிக்குத்தான்! ஆனந்தன் குண்டுமணி வீட்டுக்குச் சென்றபோது அவன் கன்ருகக் குறட்டை விட்டுத் துரங்கிக் கொண் டிருந்தான். ஆனந்தன், குண்டுமணி குண்டு மணி!” என்று பலமாகக் கூவிப் பார்த்தான். குண்டு மணி எழுந்திருக்கவில்லை. முதுகிலே பலமாகத் தட்டிப் பார்த்தான்; குத்திப் பார்த்தான். ஊஹூம் பல ளிைல்லை கடைசியில் கறுக் கென்று கன்ருக ஒரு கிள்ளுக் கிள்ளினுன். உடனே குண்டுமணி, சேச்சே, வரவர எறும்பு உபத்திரவம் அதிகமாய்விட்டது. விட் டேனு பார் இந்த எறும்பை' என்று கூறிக்கொண்டே எழுந்தான். குண்டுமணி எழுந்ததும், என்னடா குண்டு சிகா மனி, கும்பகர்ணன் சாகிறபோது அவன் துரக்கத்தை யெல்லாம் உன்னிடத்திலேதான் ஒப்படைத்துவிட்டுச் செத்தானே' என்று கேட்டான் ஆனந்தன். "யாரது?’ என்று கண்களைத் திறக்காமலே கேட்டான் குண்டுமணி. - "கொஞ்சம் கண்களைத் திறந்து பாரப்பா. நீ இருக்கிறது. பூலோகம்தான் என்பதும், உன் எதிரே இருப்பது எறும்பல்ல; உன் ஆத்ம கண்பன் ஆனந்தன் தான் என்பதும் நன்ருகத் தெரிந்துவிடும்” என்ருன் ஆனந்தன், உடனே குண்டுமணி கண்களைத் திறந்து கிமிர்ந்து பார்த்தான். பார்த்ததும் அவனுக்குச் சரி யாகத் தெரியவில்லை. கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டு திரும்பவும் பார்த்தான். உடனே அவன் முகம் மலர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/107&oldid=807833" இலிருந்து மீள்விக்கப்பட்டது