பக்கம்:பர்மா ரமணி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குண்டுமணி 105. 'அடடே, ஆனந்தன. இது என்னடா சூட்டும், ஹேட்டும்! பெரிய துரைமாதிரி இருக்கிருயே! எந்தக் கப்பலிலே வந்து இறங்கி இருக்கிருர் இந்தத் துரை ? கத்திக் கப்பலிலா, சண்டைக் கப்பலிலா, நீர் மூழ்கிக் கப்பலிலா ? அல்லது...” "...அல்லது காகிதக் கப்பலிலா என்றுதானே கேட். கிருய் ? உனக்கு எல்லாமே வேடிக்கையாகத்தான் இருக்கும்.' ஆமாம், இதெல்லாம் என்னடா வேஷம் ?” "எல்லாம் விவரமாகச் சொல்லுகிறேன். முதலில் நீ இப்போதே என்ைேடு கிளம்பி வர வேண்டும். மிகவும் அவசரமான ஒரு வேலை!” என்று கூறினன் ஆனந்தன். "அப்படியென்ருல், இதோ பல்லைத் துலக்கிவிட்டு வந்துவிடுகிறேன். முதல் வேலையாகச் சாப்பிட வேண் டும்.’’ என்ருன் குண்டுமணி. சற்று நேரத்தில் இருவரும் கிளம்பினர்கள். கேராக அருகிலே இருந்த ஒரு பெரிய ஹோட்டலுக் குச் சென்ருர்கள். அங்கே குண்டுமணி, வயிறு முட்ட பாதாம் அல்வா, மைசூர்பாகு, ஜாங்கிரி, லட்டு, இட் டலி, வடை, தோசை, போண்டா, பஜ்ஜி இன்னும் என்னென்னவோ சாப்பிட்டான், குண்டுமணி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே ஆனந்தன் ரமணியைப் பற்றிக் கூறிவிட்டு, அவனை எப்படியாவது தேடிக் கண் டு பி டி க் க வேண்டு மென்ருன். சாப்பிட்டானதும், குண்டுமணி, இனி நாம் கிளம்பலாமா? இப்போது எந்தப் பக்கம் போய்த் தேடினல், அகப்படுவான் ?’ என்று கேட்டான் ஆனந்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/108&oldid=807834" இலிருந்து மீள்விக்கப்பட்டது