பக்கம்:பர்மா ரமணி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பர்மா ரமணி இந்த ஊரில் இருக்கிறதனுலே, அவன் சொல்லு கிறபடி யெல்லாம் கேட்கவேண்டுமா ? நா 2ளக்கு, என் சிநேகிதன் வீட்டு எருமைக் கன்றுக்குட்டி காணுமல் போய்விட்டது. உடனே தேடிக் கண்டுபிடியுங்கள் என்று எழுதுவான். உடனே நான் கயிறும் தடியுமாகப் புறப்பட்டு இந்த ஊரையெல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டும். அப்படித்தானே ?” சஏன் இப்படித் தவருக எடுத்துக்கொள்ளுகிறீர்கள்? மதுரநாயகத்துக்கு இளகிய மனசு.ஒருகல்லபையனுக்கு உதவி செய்த புண்ணியமாவது கமக்குக் கிடைக்குமே!’ என்ருள் கல்யாணி அம்மாள். அப்போது அங்கே நடந்தையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஆனந்தன், அப்பா, நீங்கள் ஒன்றும் சிரமப்பட வேண்டாம். அந்தக் கடிதத்தை என்னிடம் கொடுங்கள். இன்னும் ஒரு வாரத்திலே அந்தப் பையன் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடுகிறேன். இது என் பொறுப்பு...அப்பா ! மாமா மிக மிக கல்லவர். அவர் கல்ல சமயத்திலே வந்திருக்காத போனுல், இங் கேரம் நான் இங்கேயா இருப்பேன் பட்டணத்து ஜெயி லிலே பத்திரமாக வல்லவா இருப்பேன் அவர் செய்த உதவிக்கு கான் இதுகூடச் செய்யாமல் இருக்கலாமா?” என்று கூறி அந்தக் கடிதத்தை எடுத்து ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகப் படித்துப் பார்த்தான். பிறகு சட்டைப்பையில் இருந்த ஒருசிறு கோட்டுப்புத்தகத்தை எடுத்து அதில் சில அடையாளங்களைக் குறித்துக் கொண்டான். பிறகு, : அம்மா, கவலை வேண்டாம். அக்த ரமணி எங்கேயிருந்தாலும் கான் விடப்போவ தில்லை. அவனைத் தேடிக் கண்டுபிடித்து விடுவேன் ' என்று தன்னுடைய மார்பிலே அடித்துக் கூறினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/99&oldid=808350" இலிருந்து மீள்விக்கப்பட்டது