பக்கம்:பர்மா ரமணி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருட்டுப் பட்டம் 9. மோனேஜர் வந்துவிட்டார்’ என்பதைக் கேட்டதும், ரமணியின் அழுகை அதிகமாகிவிட்டது. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். உடனே மதுரநாயகம் அவன் அருகே சென்று, *ரமணி, ஏன் அழுகிருய் ? என்ன விஷயம் ?’ என்று கலக்கத்துடன் கேட்டார். அவன் பதில் பேசவில்லை. அவனுல் பேச முடியவில்லை! மேலும் மேலும் அழுதான். சொன்னல்தானே தெரியும் சும்மா அழுது கொண்டே கின்ருல்...?’ என்ருர் மதுரநாயகம். -- உடனே, ஓர் ஓரமாக கின்றுகொண்டிருந்த காடக சபா முதலாளி மோகனரங்கம், மதுரகாயகத்தின் அருகே வந்தார். :மதுரநாயகம், நான் சொல்லு கிறேனே என்று வருத்தப்படக் கூடாது. இந்த மாதிரி ஊர் பேர் தெரியாத அனுதைகளையெல்லாம் இங்கு வேலைக்கு வைத்ததே தப்பு அன்றைக்கே சொன்னேன். நீங்கள் கட்டாயப்படுத்தினர்கள். சேச்சே, மோசம், மோசம். நமது சபாவில் இதற்கு முன் ஒரு துரும்பு கூடக் களவு போனதில்லை.........” என்று அவர் ஆரம் பித்தார். - உடனே மதுரகாயகம், என்ன களவு போய்விட் டதா? என்ன களவு போய்விட்டது ? விஷயத்தைக் கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லுங்களேன்’ என் ருர் பதட்டத்துடன். - எல்லாம் உங்கள் ரமணியைக் கேட்டாலே தெரி யும். டேய், இந்தத் திருட்டு அழுகையெல்லாம் இங்கே வேண்டாம். உன் திருவாயைத் திறந்து நீ செய்த திருவிளையாடலே எடுத்துச் சொல்லுடா! அவரும் தெரிந்து கொள்ளட்டும். அயோக்கியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/13&oldid=807858" இலிருந்து மீள்விக்கப்பட்டது