பக்கம்:பர்மா ரமணி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடைத்துவிட்டான் ! 127 பன்னிரண்டு மணிக்கு மேலே தேடினல் கட்டாயம் அகப்பட்டுவிடுவான். எங்கேயாவது ஒரு கடை வாச லில் படுத்திருப்பான். அல்லது, ஒரு வீட்டுத் திண்ணை யில் தூங்குவான்.” - - அப்படியானல், பன்னிரண்டு மணிக்கு மேலே தான் புறப்பட வேண்டுமென்கிருய். அதுவரையில் தாங்காமல் கொட்டக்கொட்ட விழித்துக்கொண்டிருக்க வேண்டுமா?" - - - - சும்மா விழித்துக் கொண்டிருக்க வேண்டாம். சுக மாக மெத்தை போட்ட காற்காலியில் உட்கார்ந்து, எதிரேயிருக்கும் வெள்ளித் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.” ஆ! அப்படிச் சொல் ! நீயும் நானும் சினிமாவுக் குப் போய் எத்தனை நாட்கள் ஓடிவிட்டன " என்ருன் குண்டுமணி. திட்டம் போட்டபடி, குண்டுமணியும் ஆனந்தனும் அன்று இரவு சினிமா பார்த்துவிட்டு பன்னிரண்டு மணிக்கு வெளியே வந்தார்கள். வெளியே வந்ததும், வராததுமாகத் துப்பறியும் வேலையில் இறங்கிவிட் i_ssist of Głł. - ஆனந்தன் கையிலே ஒரு டார்ச் விளக்கு இருந் தது. குண்டுமணி கையிலும் ஒரு டார்ச் விளக்கு இருந்தது. இருவரும் ஆளுக்கொரு பக்கமாக விளக்கை அடித்துப் பார்த்துக் கொண்டே போனர்கள். யாரா வது படுத்திருப்பது தெரிந்தால், உடனே உற்றுப் பார்ப்பார்கள், சந்தேகம் ஏற்பட்டால், எழுப்பி விசாரிக் கலாம் என்று கினைத்தார்கள். ஆனால், படுத்துக் கிடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/131&oldid=807860" இலிருந்து மீள்விக்கப்பட்டது