பக்கம்:பர்மா ரமணி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடைத்துவிட்டான்! #29 உடனே குண்டுமணி, ஏண்டா ஆனந்தா, உன் மாமாவுக்கு இந்த ரமணி ஒரே ஒரு பிள்ளை தான ? வேறு பிள்ளேயே கிடையாதா?’ என்று கேட்

  1. _.ᎱᎢᏮür .

இதைக் கேட்டதும் ஆனந்தனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. ஆலுைம் அடக்கிக்கொண்டு, அட மண்டு சிகாமணி, விடிய விடியக் கதை கேட்டு சீதைக்கு ராமச் சித்தப்பாவா?’ என்று கேட்ட கதையாகத்தான் இருக்கிறது. அன்றைக்கு ஹோட்டலில் சாப்பிடும் போதே எல்லாம் விவரமாகச் சொன்னேன். நீ சாப்பிடும் போது சொன் னேனே, அது என் தப்புத்தான்...சரி, கொஞ்சம் காதைத் திட்டிக்கொண்டு கேள். என் மாமா மதுரநாயகம் பட்டணத்திலே நீ முருகன் பால நாடக சபாவிலே மானேஜராயிருக்கிருர், அந்த சபாவிலே ரமணி என்று ஒரு பையன் வேலைக்கு இருந்தானும், அவன் மிகவும் நல்லவனும். ஆலுைம், அவன் சபாவில் பட்டுத் துணியைத் திருடிவிட்டதாக அவன் மேல் சில வேலைக்காரர்கள் பழி போட்டுவிட்டார்களாம். அவர்கள் பேச்சைக் கேட்டு நாடக சபா முதலாளி பத்துப் பன்னிரண்டு காட்களுக்கு முன்பு ரமணியை விரட்டி விட்டாராம். ஆனால், இப்போது அவன்மீது குற்றம் எதுவும் இல்லை என்பது ருசுவாகிவிட்டதாம். அவன் திருச்சியிலிருந்துமாமாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக் கிரும்ை. அதல்ை அவனை இந்த ஊரில் தேடிக் கண்டு பிடிக்கும்படி மாமா எழுதியிருக்கிருர் மாமா விருப்பப் படிகான் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறேன். எனக் - குத் துணையாக என் அருமை நண்பன் அசகாயகுரன் குண்டுமனியாகிய நீயும் வந்திருக்கிருய். அவ்வளவு தான்!. விவரம் போதுமா ? இன்னும் வேனுமா ?” என்று கேட்டான் ஆனந்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/133&oldid=807862" இலிருந்து மீள்விக்கப்பட்டது