பக்கம்:பர்மா ரமணி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடைத்துவிட்டான் 181 சரி, இவன் உயரமும் என் உயரம்தான் இருக் கிறதா என்று பார்த்துவிடலாம். குண்டுமணி, கான் இவன் பக்கத்திலே படுத்துக்கொள்கிறேன். என் உயர மும் இவன் உயரமும் சரியாக இருக்கிறதா என்று கீ பார்த்துச் சொல். சரிதான ?’ என்று கூறிவிட்டு அந்தப் பையனின் அருகே தரையில் படுத்தான் ஆனந்தன். . . . . . - - குண்டுமணி தலைப் பக்கமும் கால் பக்கமும் பார்த்து விட்டு, அச்சா வித்தியாசமே இல்லை. உன் உயரமே தான் ! சரி, இவனைச் சீக்கிரம் எழுப்பு. உம் ' என்று அவசரப்படுத்தின்ை. உடனே ஆனந்தன் அந்தப் பையனை எழுப்பினுன். அவன் பலமுறை தட்டி எழுப் பிய பிறகே எழுந்தான். அவன் எழுந்து உட்கார்ந்ததும், 'தம்பி, உன் பெயர் என்ன ?' என்று குழைவாகக் கேட்டான் ஆனகதன.

என் பெயரா ?...என் பெயர்.ரமணி ' என்ருன் அவன்,

உடனே, என்ன, ரமணியா! உனக்கு மதுரகாய கத்தைத் தெரியுமா ?’ என்று ஆச்சரியத்துடன் கேட் டான் ஆனந்தன். ஒ1 நாடக சபா மானேஜர் மதுரநாயகத்தையா எனக்குத் தெரியாது அவர் தங்கமானவர் ' என்ருன் డు)LllL 6?. இதைக் கேட்டதும் ஆனந்தனுக்கும், குண்டுமணிக் கும் அவன் ரமணிதான் என்பது உறுதியாகிவிட்டது. உடனே அவனை அப்படியே கட்டிப் பிடித்துக்கொண்டு இருவரும் குதித்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/135&oldid=807864" இலிருந்து மீள்விக்கப்பட்டது