பக்கம்:பர்மா ரமணி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132. பர்மா ரமணி பிறகு ஆனந்தன் அவனிடம், நீ இங்கே வந்து எத்தனை காளாகிறது?’ என்று கேட்டான். " பத்து நாளாகிறது.சாப்பிட்டு ஒரு வாரமா கிறது. என் கஷ்ட காலம் பட்டுத் துணியை கான் திருடிவிட்டதாக் என்மேல் பழி சுமத்தினர்கள்...” ரமணி! கவலைப்படாதே! நீ திருடவில்லை என்பது ருசுவாகிவிட்டது. மாமா உன்னைக் காணுமல் ஏங்கிக்கொண்டிருக்கிருர், வா, வா, சீக்கிரம் வீட்டுக் குப் போகலாம். பசி தீரச் சாப்பிட்ட பிறகு மிச்சத் தைப் பேசிக்கொள்ளலாம் ' என்ருன் ஆனந்தன். ※ 黎 மறுநாள் பொழுதுவிடிந்ததுமே, ரமணி கிடைத்து விட்டதாக மாமாவுக்குத் தந்தி கொடுத்துவிட்டான் ஆனக்தன். அந்தத் தக்தியைப் பார்த்ததும்தான், கமலா கமலா " என்று கத்திக்கொண்டே அடுக்களைக்கு வேக மாக ஓடினர் மதுரகாயகம் என்ன விஷயம் ? இப்படிச் சிறு குழந்தை மாதிரி ஒடி வருகிறீர்களே !' என்று கேட்டாள் கமலா தேவி. இதோ பார் தந்தி திருச்சியிலிருந்து வந்திருக் கிறது. படித்துப் பார். எல்லாம் தெரியும்” என்று கூறிவிட்டுத் தந்தியை அவளிடம் காட்டினர் மதுர காயகம். என்ன இது 1 என்னைப்படித்துப் பார்க்கச்சொல்லு கிறீர்களே விளையாடுகிறீர்களா? தந்தி தமிழிலா இருக்கிறது ? எனக்குத்தான் இங்கிலீஷ் தெரியாதே' என்ருள் கமலாதேவி, - X- .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/136&oldid=807865" இலிருந்து மீள்விக்கப்பட்டது