பக்கம்:பர்மா ரமணி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பர்மா ரமணி சந்தோஷம். நமக்கு அதிக சிரமம் வைக்காமல் கிடைத்துவிட்டான். உடனே அவனை அழைத்துவரச் சொல்லி இப்போதே பதில் தந்தி கொடுத்துவிடு வோமா ?” என்று கேட்டார் முதலாளி.

  • ஆனந்தன் என்னையல்லவா புறப்பட்டு வரச் சொல்லித் தக்தி கொடுத்திருக்கிருன் ? காரணத்தோடு தான் அவன் அப்படிக் கொடுத்திருக்க வேண்டும் ” என்ருர் மதுரகாயகம்.

' என்ன காரணமாக இருக்கும் ?” ஒன்றுமில்லை. ரமணியை ஆனந்தன் கண்டு பிடித்ததும், இங்கே அழைத்து வருவதாகத்தான் சொல்லியிருப்பான். ஆனால், ரமணிக்குத் திரும்பவும் இங்கே வர யோசனையாக இருந்திருக்கும். தயக்கத் தோடு ஏதாவது சொல்லியிருப்பான். நானே கேரில் போனுல், எப்படியும் சமாதானப்படுத்தி அழைத்து வந்துவிடுவேன். இல்லையா ? அதனுல்தான் என்னைப் புறப்பட்டு வரச்சொல்லி ஆனந்தன் தக்தி கொடுத்திருக் கிருன்.”

ஆமாம் மதுரநாயகம், அப்படித்தான் இருக்கும். சரி, இன்று இரவே நீங்கள் புறப்படுங்கள். ரமணியைக் கையோடு அழைத்துக்கொண்டு காளே இரவே திரும்பி வந்துவிடுங்கள். இன்னும் நாலு நாட்கள்தானே கடுவே இருக்கின்றன, சீனத் துரதுகோஷ்டி வருவதற்கு ?”

எனக்கு வேறு என்ன வேலை ? நாளே இரவே, ரமணியுடன் திரும்பிவிடுகிறேன்' என்று கூறிவிட்டு மதுரகாயகம் உற்சாகமாகத் தமது வேலைகளை யெல் லாம் முடித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/138&oldid=807867" இலிருந்து மீள்விக்கப்பட்டது