பக்கம்:பர்மா ரமணி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் கெட்டது : 137 பையனை அறிமுகப்படுத்தி வைத்தான் ஆனந்தன். எல்லோரும் மகிழ்ச்சியுடன் அவனைப் பார்த்தார்கள். சாப்பிடும்போது, ஒரே குது.ாகலமாகப் பேசிக் கொண்டே அவர்கள் சாப்பிட்டார்கள். சேகர் என்ற பையன், என்ன இருந்தாலும், கமது ஆனந்தன் சாமர்த்தியசாலிதான்! எவ்வளவு பாடுபட்டு இந்த ரமணியைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிருன் !" என்ருன். உடனே கோபு என்பவன், ஆனந்தன் பரீட்சை யில் தேறியிருந்தால் அப்போதே விருந்து கிடைத்திருக் கும். ஆலுைம், இப்போதாவது கிடைத்ததே அதற்கு இந்த ரமணிக்குத்தான் கன்றி சொல்ல வேண்டும் . அப்போது ஆனந்தன், ரமணி, கூச்சப்படாதே கன்ருகச் சாப்பிடு. உன்னே உத்தேசித்துத்தான் இந்த விருந்தெல்லாம்” என்ருன். ஆனந்தன் சொல்வதைக்கூட அவன் காதில் வாங் கிக்கொண்டதாகத் தெரியவில்லை. இலையில் இருந்ததை யெல்லாம் வளைத்து வளைத்து உள்ளே தள்ளிக் கொண்டே யிருந்தான். சாப்பாட்டை முடித்துக் கொண்டு எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தஞ்சாவூர் போயிருந்த ஆனந்தனின் அப்பா வேத காயகம் வந்துவிட்டார். இரவு வருவதாகக் கூறி விட்டுப் போனவர், சீக்கிரம் வேலை முடிந்துவிட்டதால் பகலிலேயே திரும்பிவிட்டார். அவரைக் கண்டதும், ஆனந்தன் துள்ளிக் குதித்துக் கொண்டே அவர் அருகே ஒடினன். அப்பா ! அப்பா:ரமணியை என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/141&oldid=807871" இலிருந்து மீள்விக்கப்பட்டது