பக்கம்:பர்மா ரமணி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பர்மா ரமணி தைகள், ரமணி அண்ணுவைக் காணுேமே ! எங்கே போயிருப்பார் ?’ என்று கவலைப்பட்டார்கள். சிற்சபேசன் போலீசுக்கு இதைப் பற்றி உடனே அறிவித்திருந்தார். அவர்கள் அலசு அலசென்று அலசினர்கள். சிற்சபேசனும் அவரது ஆட்களும் தேடாத இடம் பாக்கியில்லை. சில பெரிய குழந்தை களும் அவர்களுடன் சேர்ந்து கவலையோடு தேட ஆரம் பித்தார்கள். மூன்று காட்களாகத் தேடியும் ரமணி அகப்படவில்லை ! காலாவது காள் சிற்சபேசன் தமக்கு வந்த கடிதங் களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதில் ஒரு கடி தத்தை அவர் பிரித்துச் சாவதானமாகப் படிக்க ஆரம் பித்தார். இரண்டு வரிகளைப் படித்ததும், அவர் முகம் மாறியது. பரபரப்புடன் முழுவதையும் படித்தார். படித்து முடித்ததும், ஆ, ரமணி.! உனக்கு ஆபத்தா! ஐயோ!' என்று அலறிஞர். சத்தத்தைக் கேட்டுக் காமாட்சி அம்மாள், மாலதி, இன்னும் அங்கு வந்திருந்த நாலைந்து குழந்தைகள் எல்லோரும், என்ன, என்ன !' என்று திகிலுடன் கேட்டுக்கொண்டே அருகில் ஓடி வந்தார்கள்.

ஐயோ, ரமணியைக் கொண்டு போய்விட்டார் களே !’ என்று கதறி அழுதார் சிற்சபேசன்

என்ன ! கொண்டுபோய் விட்டார்களா ? யார் கொண்டு போனது ?" என்று அங்கே இருந்த எல் லோரும் ஒரே சமயத்தில் பரப்ரப்போடு கேட்டார்கள். "பண ஆசை பிடித்த சில அயோக்கியர்கள்தான் இந்த வேலையைச் செய்திருக்கிருர்கள். ரூபாய் பத்தா யிரம் கொடுத்தால்தான் ரமணியைத் திருப்பித் திரு. வார்களாம்! ......”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/181&oldid=807942" இலிருந்து மீள்விக்கப்பட்டது