பக்கம்:பர்மா ரமணி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருண்ட குகையில் 177 "அப்படியா! ஐயோ! ரமணியை அவர்கள் இக் கேரம் என்ன பாடு படுத்துகிருர்களோ!...பத்தாயிரத் தைக் கொடுத்தால் உடனே திருப்பித் தந்து விடு வார்களா? நிஜமாகவா ? என்று கேட்டாள் காமாட்சி տՅյւԸԼDfr6ո. 'அப்பா, அப்பா, எப்படியாவது ரமணி அண்ணு வைக் கூட்டி வந்துவிடு. அப்பா, அண்ணு இல் லாமல் எனக்கு ஒரே கஷ்டமா யிருக்கிறது!’ என்ருள் மாலதி, அப்போது அங்கிருந்த அடுத்த வீட்டுப் பர்மியப் பையன்-அவன் பெயர் மவுங் லா அவுங், ஆமாம், இப்போது ரமணியை எங்கே வைத்திருக்கிருர்களாம் ? காம் யாரிடத்திலே பணத்தைக் கொடுக்க வேண்டு மாம் ? என்று அவர்களிடம் கேட்டான். 'எந்த இடத்தில் ரமணியை வைத்திருக்கிருர்கள் என்பதை எழுதவில்லை. ஆனல், எந்த இடத்தில் பணத்தைக் கொண்டுபோய் வைக்க வேண்டும் என் பதை மட்டும் எழுதியிருக்கிருர்கள். இந்தப் பங்களா வுக்குத் தெற்கே ஐந்து மைல் துரத்தில் ஒரு மலே இருக்கிறதே, அந்த மலையின் வடக்கு ஓரத்தில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறதாம். அந்த ஆலமரத்தின் பின்புறத்திலே ஒரு பொந்து இருக்கிறதாம். ஒரு சிறிய பெட்டியில் ரூபாய் பத்தாயிரத்தை வைத்து அக் தப் பெட்டியை காணுவது அல்லது கம் ஆளாவது கொண்டுபோய் அந்தப் பொந்திலே யாருக்கும் தெரி யாமல் வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமலே வந்து விட வேண்டுமாம். காம் வைக்கும் பெட்டியை அந்த அயோக்கியர்கள் எப்படியாவது எடுத்துக் கொள்வார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/182&oldid=807944" இலிருந்து மீள்விக்கப்பட்டது