பக்கம்:பர்மா ரமணி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரமணி கிடைத்தான் ! 189 யானுல், சுந்தரமும் வீட்டுக்கு வந்திருக்க வேண்டுமே !” என்ருன் ரமணி திகைப்புடன் இருக்கலாம்; அவன் வீடு எங்கே இருக்கிறது? உனக்குத் தெரியுமா? என்று கேட்டார் சிற்சபேசன். அமரபுராவில் இருக்கிறதாம். அவன் அப்பா ஒரு பெரிய மர வியாபாரியாம். பெயர் தாமோதரம்.” அப்படியா சரி, இப்போதே ஒர் ஆள் அனுப்பி விசாரித்து வரச் சொல்லுகிறேன்” என்று கூறிவிட்டு உடனே ஒரு வேலைக்காரனை அமரபுராவுக்கு அனுப்பி வைத்தார் சிற்சபேசன். அமரபுரா ஐராவதி நதியின் அக்கரையில் உள்ளது. மாந்தலே இக்கரையில் உள் ளது. ஆவா பிரிட்ஜ்’ என்ற பாலத்தைக் கடந்து அமரபுராவுக்குப் போக வேண்டும். அன்று முழுவதும் ஓயாமல் குழந்தைகளும் பெரிய வர்களும் ரமணியைப் பார்க்க வந்து கொண்டே யிருந் தார்கள். எல்லோரும் ரமணி திரும்பி வந்ததைக் கண்டு ஆனந்த மடைந்தார்கள். அத்துடன் அவன் எப்படித் திரும்பி வந்தான் என்பது தெரியாததால் ஆச்சரியமும் அடைந்தார்கள். வந்தவர்கள் எல்லோரிடமும், ' வழக்கம்போல் காளைச் சாயங்காலம் கதை உண்டு. எல்லோரும் வந்து விடுங்கள் ' என்று சொல்லி அனுப்பினுன் ரமணி. எல்லோரும் அளவு கடந்த உற்சாகத்தோடு வீடு திரும்பினர்கள். விளக்கு வைக்கும் கேரம், அமரபுராவுக்குச் சென்ற வேலேக்காரன் திரும்பி வந்தான். அவன் மட்டும் வர வில்லை; கூடவே, சுந்தரத்தின் அப்பா தாமோதரமும் வந்து சேர்ந்தார். அவர் வந்ததும், வராததுமாக 1501–13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/195&oldid=807971" இலிருந்து மீள்விக்கப்பட்டது