பக்கம்:பர்மா ரமணி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரமணி கிடைத்தான்! #93 என்னென்ன தொந்தரவுகள் கொடுக்கிருர்களோ ! பாவம்” என்று கூறினன். அப்போது அவன் கண்கள் கலங்கின. மேலே பேசவும் வாய் வரவில்லை. உடனே சிற்சபேசன், சரி ரமணி, இன்று கதை சொன்னது போதும். பேசாமல் போய் மாடியில் படுத் துக்கொள்’ என்று கூறிவிட்டு, அங்கிருந்தவர்களிடம், பிரமணிக்கு அந்தப் பையனைப் பற்றியே கவலை. இர வெல்லாம் இதே கினைவுதான். காஜலயில்கூடச் சொல் லிக்கொண்டிருந்தான். இன்று கதை கேட்டதுபோதும், காளை வாருங்கள். கட்டாயம் கேட்கலாம் என்று சொன்னுர், அந்த இடத்தை விட்டுப் போக யாருக்குமே மனம் வரவில்லை. ஆலுைம், என்ன செய்வது? சக்தர்ப்பம் சரி யில்லையே! எல்லோரும் எழுந்து போய்விட்டார்கள், ஆனல், அந்தக் கிழவர் மட்டும் போகவில்லை அவர் சிற்சபேசனப் பார்த்து, ஆஹா பிள்ளை யென்ருல் இப்படியல்லவா இருக்கவேண்டும்? மிகவும் அற்புதமாகக் கதை சொல்லுகிருன். கொஞ்ச நாட்கள் தான் பழகினலும், கல்ல சிநேகிதனை மறக்காமல் இருக் கிருன்! இவன் உங்களுக்குப் பிள்ளையாகப் பிறந்ததே முன் ஜன்மத்தில் நீங்கள் செய்த புண்ணியம்தான். இவ லுடைய தங்கமான குணத்துக்கு எல்லாம் கல்லபடியா கவே கடக்கும். கவலைப்படாதீர்கள். ஆண்டவன் அருள் புரிவார்’ என்ருர், உடனே சிற்சபேசன், தாங்கள் யார்? தெரியவில் இலயே?’ என்ருர். என் ஊர் தஞ்சாவூர். பர்மாவைச் சுற்றிப் பார்க்க வந்தேன். இந்த ஊருக்கு வந்ததும், தம்பி அபாரமாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/199&oldid=807977" இலிருந்து மீள்விக்கப்பட்டது