பக்கம்:பர்மா ரமணி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 பர்மா ரமணி கதை சொல்லுவதாகக் கேள்விப்பட்டேன். எனக்குக் கதை கேட்பதென்ருல், சிறு வயதிலிருந்தே பிரியம் அதிகம். தம்பியின் கதையைக் கேட்கத்தான் வந் தேன்’ என்று கூறிவிட்டு, ரமணியைப் பார் த் து: சிதம்பி, உன் சிநேகிதன் பெயர் என்ன என்று சொன்னுய் ?’ என்று கேட்டார். சுந்தரம்” என்ருன் ரமணி. சுந்தரம். அப்படியால்ை, ஐந்து எழுத்துப் பெயர். கல்ல பெயர்தான். சரி, ஒரு பூவின் பெயர் சொல்." 'ஏன் தாத்தா, உங்களுக்கு ஜோஸ்யம்கூடத் தெரி யுமா !” தெரியுமா என்ரு கேட்கிருய்? அதுதானே என் பரம்பரைத் தொழில்? பூவராக ஜோஸ்யர் என்ருல் தஞ் சாவூர் ஜில்லாவிலே கைக் குழந்தைக்குக்கூடத் தெரி யுமே ?” 'ஒஹோ, அப்படியா! சரி, இதோ ஒரு பூவின் பெய ரைச் சொல்லட்டுமா ? தாமரை!” என்ருன் ரமணி. “தாமரையா சரி, இது மூன்றெழுத்துப் பெயர்' என்று கூறிவிட்டு வாய்க்குள் ஏதோ முணுமுணுத் தார். பிறகு தம்பி, கவலைப்படாதே! நீ கருதிய காரியம் சீக்கிரத்தில் கைகூடும். நீ என்ன நினைக்கிருய் ? உன் சிநேகிதன் சுந்தரம் எப்போது திரும்பி வரு வானே என்றுதானே கி ஆன க் கி ரு ய் ? நாளைக் காலேயில் தாமரை மலர்வதற்குள் வந்து சேர்ந்துவிடு வான்.' "என்ன ! உண்மையாகவா, தாத்தா ? அவன் எப் படி வருவான் ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/200&oldid=808035" இலிருந்து மீள்விக்கப்பட்டது