பக்கம்:பர்மா ரமணி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவிலே பரபரப்பு i55 அதெல்லாம் இப்போது சொல்லக்கூடாது. என் ஜோஸ்யம் பலிக்கிறதா இல் லேயா என்பது நாளைக் காலை யிலே தெரிந்துவிடும். நான் வருகிறேன். கவலைப் படாதே' என்று கூறிவிட்டுப் போய்விட்டார் கிழவர். 24. இரவிலே பரபரப்பு 'ரமணி கிடைத்துவிட்டான் என்று காமாட்சி அம் மாள் சிற்சபேசன், மாலதி எல்லோரும் ஆனந்தப் பட் டுக் கொண்டிருந்தார்களே, அதே சமயம், ரமணியைக் காணுேமே!’ என்று குகை முழுதும் தேடிக் கொண்டி ருந்தார்கள் முரடர்கள். ஆம், அன்று காலையில் எழுந்ததும், தலைவன் மற். றவர்களேயெல்லாம் சத்தம் போட்டு எழுப்பினன். எல் லோரும் எழுந்து விளக்குகளே ஏற்றினுர்கள். இரவிலே அடிபட்ட ரமணி அப்போது எப்படியிருக்கிருன் என்று பார்ப்பதற்காக, அவன் படுத்திருந்த பக்கம் பார்த்தான் தலைவன். அங்கு ரமணி இல்லை. எங்கே ரமணி : காணுேமே!’ என்று கேட்டுக்கொண்டே அங்குமிங்கும் பார்த்தான். ரமணி தென்படவில்லை. உடனே, மற்றவர் களையும் அழைத்துக்கொண்டு குகையின் மூலே முடுக்கி லெல்லாம் தேடிப்பார்த்தான். ரமணி குகைக்குள் இருந்தால்தானே அகப்படுவான் ? ரமணியைக் காணுேம் என்றதும் தலைவன் இரும் புக் கதவை நோக்கி ஓடினன். அது பூட்டியபடியே இருந்தது. உடனே, அவனுடைய ஆச்சரியம் அதிகமா கியது. என்ன இது! அவன் எங்கே போயிருப்பான்? எப்படிப் போயிருப்பான் மாயமாய் இருக்கிறதே !” என்று யோசித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/201&oldid=808037" இலிருந்து மீள்விக்கப்பட்டது