பக்கம்:பர்மா ரமணி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவிலே பரபரப்பு 197 கும் இடத்தைக் காட்டிக் கொடுத்து விடுவான் " என்று கொஞ்சம் அச்சத்தோடு கூறினன்.

அந்தக் கவலையெல்லாம் உங்களுக்கு வேண்டாம். இதோ கான் செருப்புத் தைப்பவனைப் போல் கிளம்பு கிறேன். ரமணி அங்கிருந்தால், இரவோடு இரவாக அவனைத் துாக்கி வந்துவிடுகிறேன். ஆளுல், கான் திரும்பி வரும்வரையில் நீங்கள் வெளியே தலைகாட்டா தீர்கள். ஆபத்து பேசாமல் இங்கேயே இருங்கள் ’ என்று கூறிவிட்டுக் கிளம்பிச் சென்ருன் சுப்பையா.

அன்று முழுவதும் சுப்பையா, திரும்பி வரவில்லை. மறுநாளும் வரவில்லை. தலைவன் ஒவ்வொரு கிமிஷமும் சுப்பையாவை எதிர்பார்த்துக் கொண்டே யிருந்தான்; அவன் வராததால், அவனுக்குப் பலபல சந்தேகங்கள் தோன்றின. ஒருவேளை சுப்பையா அகப்பட்டுக்கொண் டிருப்பானே ? இருக்காது. அவன் தந்திரசாலி சமயம் பார்த்துக் கொண்டிருக்கிருன் போலிருக்கிறது. எதற் கும் நாளைக் காலை வரையில் பார்க்கலாம். இல்லாத போனுல், யாரையாவது அனுப்பலாம் ' என்று கினைத் தான். . இரவு மணி சுமார் பத்து இருக்கும். குகைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், உடனே தலைவனும், மற்றவர்களும் ஒடிப்போய்ப் பார்த்தார்கள். சுப்பையா தான் வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் *என்ன சுப்பையா, வெறும் கையோடு திரும்பி வரு கிருயே! அந்தப் பையனைப் பார்க்கவில்லையா?” என்று ஏமாற்றத்தோடு கேட்டான் தலைவன். போர்த்தேன். அந்த பங்களாவில்தான் அவன் இருக்கிருன் ஆல்ை, எப்படி அங்கே போய்ச்சேர்ந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/203&oldid=808041" இலிருந்து மீள்விக்கப்பட்டது