பக்கம்:பர்மா ரமணி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பழைய சம்பவம் மதுரநாயகம் கீழே இறங்குவதற்குள் பின்னோக்கி வந்த அந்த ரிக்ஷா சரிவிலே வெகு வேகமாக ஓடியது. அதைத் தொடர்ந்து ரிக்ஷாக்காரனும் ஓடினான். ஆனாலும், அவனால் ரிக்ஷாவைப் பிடித்து இழுத்து நிறுத்த முடியவில்லை! சிறிது தூரம் சென்றதும், தலை குப்புறக் கவிழ்ந் தது அந்த ரிக்ஷா ! அதிலிருந்து ஒரு குண்டு மனிதர் "அம்மாடியோவ்! என்று கதறிக்கொண்டே கீழே சாய்ந்தார். மறு நிமிஷம், ஓடி வந்த ரிக்ஷாக்காரன் அவர் அருகே சென்றான். "ஐயையோ! அடி பட்டு விட்டதா ! எந்த இடத்திலே அடி? என்னை மன்னிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே அவரது உடம் பைத் தொட்டுப் பார்த்தான். இதற்குள் மதுரநாயகம் அங்கே வந்துவிட்டார். அவர் மட்டும் வரவில்லை; ஒரு சிறு கூட்டமே வந்து விட்டது! ஒரு போலீஸ்காரரும் அங்கே வந்து சேர்ந் தார். அந்தப் போலீஸ்காரர் கூட்டத்துக்குள்ளே புகுந்தார். அங்கே நின்ற ரிக்ஷாக்காரனைக் காதைப் பிடித்து இழுத்துச் சென்றார். பக்கத்திலே இருந்த 'மெர்க்குரி' விளக்கின் அடியிலே கொண்டுபோய் நிறுத்தினார். கூட்டமும் அங்கே வந்தது. மதுரநாயகம் கீழே விழுந்த கனத்த மனிதரை மெதுவாகத் தூக்கிவிட்டு, "அடி பலமோ?" என்று கேட்டார். "நல்ல காலம்; அடி எதுவும் இல்லாமல் தப்பி னேன், ஜீவன் செத்த பயல்களெல்லாம் ரிக்ஷா இழுக்க வந்துவிட்டான்கள்!" என்று அந்தக் குண்டு மனிதர் ஆத்திரத்துடன் சொன்னார். 817-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/21&oldid=1419221" இலிருந்து மீள்விக்கப்பட்டது