பக்கம்:பர்மா ரமணி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய சம்பவம் - 1% அந்தப் பையனேப் பார்த்தவுடனே மதுரகாயகத் துக்கு அவனிடம் ஒரளவு அநுதாபம் ஏற்பட்டுவிட்டது. "இந்த வயதில் இவன் ஏன் ரிக்ஷா இழுக்கவேண்டும்? எப்படி இவனுக்கு இந்த ரிக்ஷா கிடைத்தது?’ என் றெல்லாம் எண்ணினுர், கடைசியில், சரி, நாமும் இவர்களோடு போய், என்ன நடக்கிறது என்றுதான் பார்ட்டோமே !’ என் று கினைத்துக்கொண்டே அவர் களின் பின்னல் சென்ருர். போலீஸ் - ஸ்டேஷனுக்குச் சென்றதும், சப்.இன்ஸ்பெக்டருடைய அறைக்குள் என்ன நடக்கிறது என்பதை ஜன்னல் ஒரமாக கின்று கவனித்தார். சப்-இன்ஸ்பெக்டரிடம் கடந்ததைச் சுருக்கமாகக் கூறினர் போலீஸ்காரர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் ரிக்ஷா இழுத்த சிறுவனப் பார்த்துக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவன் கூறிய பதில் இதுதான். - - கான் பிறந்தவுடனே என் அம்மா. ஜன்னிகண் இறந்து போனுள். என் அப்பாவும் ஆறேழு மாதங் களுக்கு முன்பு ஒரு வெறி காய் கடித்துச் செத்துப் போனுர், வேறு உற்ருர் உறவினர் இல்லாததால் கான் அைைதயானேன்; என் அப்பா பணம் எதுவும் சேர்த்து வைக்கவில்லை. அதல்ை, எட் டாவது வகுப்பைப் பாதியிலே முடித்துக்கொண்டு ஊர் ஊராக வேலைக்கு அலைந்தேன். ஒன்றிரண்டு இடங்களில் வேலை கிடைத்தது ஆலுைம், அங்கெல்லாம் அதிக காள் இருக்கமுடியாமல் போய்விட்டது. கடைசியாக இந்தப் பட்டனத்துக்கு வந்தேன். வந்து ஒரு மாதம் ஆகிறது. இங்கும் வேலை கிடைக்கவில்லை. அதல்ை, கூலி வேலை பார்த்தாவது காலத்தைக் கழிக்கலாம் என்று கினைத்தேன். அதில் தினம் இரண்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/22&oldid=808094" இலிருந்து மீள்விக்கப்பட்டது