பக்கம்:பர்மா ரமணி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 பர்மா ரமணி வில்லை. என்னையே விஷயத்தை அறிந்துவர வெளியில் அனுப்பினர்கள். செருப்புத் தைப்பவன் போல் வேஷம் போட்டுக்கொண்டு போகும்படி தலைவன் சொன்னன். ஆளுல், அந்த வேஷத்தில் நான் உங்கள் வீட்டுக்கு வரவில்லை.” தோடிகரைத்த கிழவரைப் போல் வேஷம் போட்டுக் கொண்டு வந்தேன். உன்னைப் பார்க்கப் பார்க்க என் உள்ளம்பூரித்தது. உன் கதைகளை முன் வரிசையில் உட்கார்ந்து கேட்கக் கேட்க எனக்கு ஒரே ஆனந்தமா யிருந்தது. ஆல்ை, திடீரென்று நீ கதையை கிறுத்தி விட்டாய். காரணம் தெரிந்தது. உன் அருமை கண் பன் சுந்தரம் குகையில் இருப்பதை கினைத்தே நீ கவலைப் படுகிருய் என்று அறிக்தேன். அவன் கட்டாயம் மறு நாள் காலைக்குள் வந்துவிடுவான் என்று ஜோலியம் கூடச் சொன்னேன் ஆல்ை, சொல்லிவிட்டு நான் சும்மா இருக்கவில்லை. உன் ஆசையைப் பூர்த்தி செய்ய கேற்று இரவே அங்கு சென்றேன். கள்ளிரவில் ஒரு தாடிப் பரதேசி போல் வேஷம் போட்டுக்கொண்டு சுக் தரத்தைத் துக்கிக் கொண்டு கிளம்பினேன் ஆல்ை எதிர்பாராத விதமாகத் தலைவன் விழித்துக்கொண்டு விட்டான். உடனே, கூச்சல் போட்டு மற்றவர்களோடு என்னைத் துரத்தின்ை. கல்லால் அடித்தான். காயப் படுத்தின்ை. ஆலுைம், சுந்தரத்துக்கு ஒரு காயமும் இல்லாமல் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்த்துவிட் டேன். கான் எத்தனையோ பாதகச் செயல்களை யெல் லாம் செய்திருக்கிறேன். ஆலுைம், கடைசி காலத்தி லாவது ஒரு நல்ல காரியம் செய்தேனே,இதுவே எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.” சுப்பையா கூறியதைக் கேட்கக் கேட்க எல்லோரு டைய ஆச்சரியமும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/218&oldid=808087" இலிருந்து மீள்விக்கப்பட்டது