பக்கம்:பர்மா ரமணி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராதது ! 213 சப்-இன்ஸ்பெக்டரும் ஆச்சரியத்துடனே அவன் இது வரை கூறியதை யெல்லாம் குறித்துக் கொண்டார். பிறகு, சுப்பையா, உன்னிடம் ஒன்று கேட்க வேண் டும். உன் கோஷ்டியார் இதுவரை எத்தனை பிள்ளை களைத் துரக்கிச் சென்றிருப்பார்கள் ?’ என்று கேட்டார்.

  • சுமார் அறுபது இருக்கலாம். ஆலுைம், காங்கள் ஒரு பழக்கம் வைத்திருந்தோம். காங்கள் சொல்லும் இடத்தில் பணத்தை வைத்துவிட்டால், பணத்தை எடுத்துக்கொண்டு, தூக்கி வந்த பிள்ளைகளைத் திருப்பி அனுப்பிவிடுவோம். இப்போது ஒரு குழந்தை கூட அக் குகையில் இல்லை. '

உடனே, அப்படியா கடிதம் கிடைத்த அன் றைக்கே குறிப்பிட்ட மரப் பொங்தில் பத்தாயிரத்தைக் கொண்டு போய் வைத்தோமே ! ஏன் சுந்தரத்தைத் திருப்பி அனுப்பவில்லை ?’ என்ருர் சுந்தரத்தின் அப்பா தாமோதரம். நிஜமாகவா? பணம் மரப் பொந்துக்கு வரவில் லேயே t' என் ருன் சுப்பையா. உடனே தாமோதரம், ஏண்டா, கந்தசாமி ! உன் னிடம்தானே கொடுத்து அனுப்பினேன் ' என்று கேட்டுக் கொண்டே, தன்னுடன் வந்த தேக்கு மரக் காட்டு மேஸ்திரியான கந்தசாமி கின்ற பக்கம் திரும் பினர். அப்போது அவன் மெதுவாக கழுவப் பார்த் தான். உடனே குப் பென்று பாய்ந்து அவன் கழுத் தைப் பிடித்துக் கொண்டார். பிறகு போலீஸார் அவனை உதைத்துக் கேட்டதில் உண்மை வெளியாயிற்று. எஜமான ஏமாற்றிப்பணத்தை ஏப்பம் விட்டுவிட்டான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/219&oldid=808092" இலிருந்து மீள்விக்கப்பட்டது