பக்கம்:பர்மா ரமணி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் குணம் 33. ஏறிவிட்டேன். என்னைப் போன்றவர்களே வைத்து இந்தப் பொடியல்ை இழுக்க முடியுமா ? ஏதோ தெரி யாமல் செய்துவிட்டான்! இவனை விட்டு விடுவதில் எனக்கும் சம்மதமே ' என்று பரிந்து பேசினர். சப்-இன்ஸ்பெக்டர் சிறிதுநேரம் யோசனை செய் தார். பிறகு அந்தப் பையனைப் பார்த்து, சரி. ஏ. பையா, இனி ஒரு தடவை நீ இந்த மாதிரி செய்தாயோ, தண்டனை கிச்சயம்தான். இப்போது உன்னை விட்டு விடுகிறேன்” என்று கூறிவிட்டு, என்ன மிஸ்டர் மதுரகாயகம், உங்களுக்குத் திருப்திதானே?’ என்று. கேட்டார். மிேகவும் கன்றி என்று கூறிவிட்டு சப்-இன்ஸ் பெக்டரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வங் தார் மதுரகாயகம். ரமணியும் அவர் பின்னுல் வக் தான். வெளியே வந்ததும், சார், நீங்கள் தெய்வம் போல் வந்தீர்கள். உங்களை மறக்கவே மாட்டேன்’ என்று கண் கலங்கக் கூறினன் ரமணி.

  • அது போகட்டும். இனி நீ இப்படியெல்லாம் செய்யாதே. காளைக் காலையில் ஏழு மணிக்கு என் வீட்டுக்கு வா. விலாசம் இதோ இருக்கிறது” என்று கூறித் தம்முடைய தோல் பையிலிருந்த விசிட்டிங் கார்ட் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார் மதுரகாயகம். -

4. அவன் குணம் மறுநாள் காலை கேரம். மதுரநாயகத்தின் வீட்டுக் கடிகாரம், டாண் , டாண்’ என்று ஏழு தடவைகள் அடித்து முடித்தது. அதே சமயம், சார் சார்’ என்ற குரலும் கேட்டது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/26&oldid=808125" இலிருந்து மீள்விக்கப்பட்டது