பக்கம்:பர்மா ரமணி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் குணம் 25 இரண்டு ரூபாய் சம்பளம் தந்தார் அந்தப் பணக்காரர். அவர் சுத்தக கருமி. ஈவு இரக்கம் இல்லாதவர். ஒருநாள் காலை நேரம், ஒரு சிறு பெண்-வயது ஐந்து கூட இருக்காது-பிச்சை கேட்க அந்த வீட் டுக்கு வந்தாள். அப்போது எல்லோரும் பலகாரம் சாப்பிட்டுவிட்டார்கள். நான் மட்டும்தான் சாப்பிட வேண்டும்.

பிச்சைக்காரப் பெண், ஐயா சாமி, பிச்சை போடுங்கள். பசியாயிருக்கிறது என்று கூறிக் கொண்டே கையிலிருந்த தட்டை நீட்டினுள். அவளைப் பார்க்க எனக்குப் பரிதாபமாயிருந்தது. ஆனல், அந்தப் பணக்காரருக்குக் கோபம்தான் வந்தது. சீ கழுதை : போ. பிச்சை வேண்டுமாம் பிச்சை! பிறக்கும்போதே பிச்சைப் பாத்திரத்தோடே பிறந்துவிட்டது. டோ, போ' என்று விரட்டினர். -
அந்தப் பெண் போகவில்லை. ஐயா, உங்க ளுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு. ஏதாவது கொடுங்கள், ஐயா!' என்று கூறி அவரது காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சிள்ை. உடனே அவர் காலை வேகமாக உதறினர். அவள் கீழே விழுந்தாள். கையி லிருந்த தட்டும் தரையிலே உருண்டு ஓடியது. அந்தப் பரிதாபக் காட்சியைக் காண எனக்குச் சகிக்கவில்லை.

சற்று கேரம் சென்று அந்தப் பெண் மெதுவாக எழுந்தாள். கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு கடக்க ஆரம்பித்தாள். - - - -

ஐந்து நிமிஷம் சென்றது. பணக்காரர் என் னிடம் காலணுக் கொடுத்துப் பொடி வாங்கிவரச் சொன்னர். வெளியே வந்ததும், அந்தச் சிறு பெண் எங்கே என்று தேடிப் பார்ததேன். தெருக் கோடியில்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/28&oldid=808129" இலிருந்து மீள்விக்கப்பட்டது