பக்கம்:பர்மா ரமணி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£6 பர்மா ரமணி கனத்துப்போய் அவள் உட்கார்ந்திருந்தாள். உடனே கான் அவளிடம் ஒடினேன். தங்கச்சி, நீ வருத்தப் படாதே! உன்னை ஒரு பணக்காரர் பிடித்துத் தள்ளி குரே, அவர் வீட்டில்தான் நான் இருக்கிறேன். உன் இனப் பார்க்க எனக்கு வருத்தமாயிருக்கிறது. நீ இப் போதே எழுந்து நேராக அந்த வீட்டுக் கொல்லேப் புறத்துக்குப் போ. நானும் ஒரு நொடியில் அங்கு வந்து விடுகிறேன். வந்ததும், உனக்கு நிச்சயம் ஏதாவது சாப்பிடுவதற்குத் தருவேன்' என்று கூறி அவளே அனுப்பி வைத்தேன். - சிறிது நேரத்தில் பொடியை வாங்கிக்கொண்டு போய்ப் பணக்காரரிடம் கொடுத்துவிட்டு, சமையல் கட்டுக்குச் சென்றேன். எனக்காக இருந்த மூன்று இட்டலிகளையும் ஒரு இலையில் வைத்தேன். அவற்றை எடுத்துக்கொண்டு கொல்லப்புறத்துக்குச் சென்றேன். அங்கே தயாராகக் காத்துக்கொண்டிருந்த சிறுமியிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னேன். சி றுமி ஆசை ஆசையாக இட்டலிகளைச் சாப்பிடுவதைக் கண்டு ஆனந்தம் அடைந்தேன். . "இது நடந்து கால்மணி நேரம்கூட ஆகியிருக் காது. முதலாளி கூப்பிடுவதாகச் சமையல்காரன் வந்து என்னைக் கூப்பிட்டான். உடனே கான் அந்தப் பணக் காரரிடம் சென்றேன். டேய், நீ என்ன வேலை செய் தாய்: அபோக்கியப் பயலே யாரோ ஒரு பிச்சைக்காரப் பெண்ணும். அவளுக்கு கீ இட்டலி கொடுத்தாயாமே! யாரைக் கேட்டுக்கொண்டு கொடுத்தாய்?’ என்று கோபத்துடன் இரைந்தார். எசமையல்காரன் கோள் சொல்லியிருக்கவேண் டும் என்று தெரிந்துகொண்டேன். "ஐயோ, கான் ஒன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/29&oldid=808156" இலிருந்து மீள்விக்கப்பட்டது